விஜய்யை பார்த்தால் ஓங்கி குத்துவீர்களா.. கொந்தளித்த தவெக நிர்வாகிகள்.. போலீசில் பரபர புகார்!
கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது தவெக தலைவர் விஜய்யின் முகத்தில் குத்த வேண்டும் என்று பேசிய நடிகர் ரஞ்சித் மீது தவெகவின் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ரஞ்சித்தின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறியுள்ள தவெகவினர், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்து முன்னணி சார்பாக கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது நடிகர் ரஞ்சித் பேசுகையில், ஒரு வாக்காளனாக ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யாரென்றால் அது மோடிதான். அவர்தான் என்னை காப்பாற்றுகிறார். அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி தான்.

அவரை கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை கிடையாது. 2014ல் கோவையில் மோடியை சந்திப்பதற்காக பூனைக் குட்டி போல் கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்துவிட்டார் போல.. அன்று எந்த மக்கள் பிரச்சனைக்காக மோடியை விஜய் சந்தித்தார்? அவரின் தலைவா படம் ரிலீஸ் பிரச்சனைக்காக காத்திருந்தார். பிரமரை மிஸ்டர் என்றும், முதல்வரை அங்கிள் என்றும் பேசுகிறார்.
விஜய் மூளையில் ஏதோ பிரச்சனை வந்துவிட்டது. விஜய்க்கு அறிவில்லையா? எனக்கு வரும் கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கிறது.. அதனை வாக்காள் குத்தி வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். நடிகர் ரஞ்சித்தின் இந்த பேச்சு தவெக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தவெகவினர் நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையினரிடன் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளனர். சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜலீல் என்பவர் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருக்கிறார். அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் மீது அவதூறாக பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக மக்களிடையே அமைதியை கெடுக்கும் வகையிலும், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய நடிகர் ரஞ்சித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், முறையாக விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications