பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் நடத்தவே கூடாது! சட்டம் வரணும்! கொதித்த நடிகர் ரஞ்சித்
கோவை: சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும் என நடிகர் ரஞ்சித் விமர்சித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் நல்லதொரு மாற்றம் வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை விவரித்துள்ளார்.
கோவை பெரியக் கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் "கவுண்டம்பாளையம்" திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ரஞ்சித் பேசுகையில் கவுண்டம்பாளையம் திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் நடிக்கும் இந்த படத்தை நானே இயக்குகிறேன்.
கோவையை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல்தான் படத்தின் கதை கரு. இன்றைய காலகட்டத்தில் வரதட்சிணை கொடுமை, கொலை, தற்கொலை உள்ளிட்டவை நடக்கின்றன.
சுயமரியாதை திருமணம் என கூறி எவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கோபம் வரும். சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்றவர்களுக்கு செய்யச் சொன்னால் செய்யமாட்டார்கள்.
பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து திருமணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே. அரசியல் கட்சி தொடங்கவும், வேறு ஒரு கட்சியில் சேரவும் எனக்கு திட்டமில்லை.
கள்ளச்சாராயம் விற்பவர்கள் சட்டசபையில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா, நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியலில் மாற்றம் வர வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு உதவுகிறார்களே, இது ஏன்? எல்லாம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டுதான்.
சாலைகளில் திரும்பும் இடமெல்லாம் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்லோ பாய்சன். இதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. கள்ளச் சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது.
எனவே, நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என ஆசை எனக்கும் உள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் வருமானம் இல்லாததால் இவர்கள் விரும்புவதில்லை. மதுவை வைத்துத் தான் வளர்ச்சி. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சியடைந்து வருகிறது. பிளாஸ்டிக்கையே ஒழிக்க முடியவில்லை. இவர்கள் எப்படி மதுவை ஒழிப்பார்கள் என ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications