"ச"ன்னா சனாகான்.. "த"ன்னா தமன்னா.. அதுதானே சனாதனம்னு உதயநிதி சொல்வாரு.. நடிகை விந்தியா தாக்கு
கோவை: சனாதனம் என்றால் என்ன தெரியுமா என கேட்டு அமைச்சர் உதயநிதியை நடிகை விந்தியா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதிமுக என்ற கட்சி தொடங்கி நேற்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இநத் நிலையில் 52 ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நடந்த விழாவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
எம்ஜிஆர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அது போல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக தொடக்க விழா நடந்தது. இதில் கோவையில் நடந்த விழாவில் நடிகையும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் சனாதனம் குறித்து யாருதான் பேச ஆரம்பித்தார்கள் என கேட்டேன். அப்போதுதான் உதயநிதி பேசினார் என தெரியவந்தது. பத்திரிகையாளர்கள் உதயநிதியிடம் போய் சனாதனம் என்றால் என்ன என கேட்டால் சனான்னா சனாகான், த என்றால் தமன்னா என்பார். அவருக்கு அவ்வளவுதான் தெரியும்.
அவருக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவருக்கு அர்த்தமே தெரியாது. நீங்கள் யாரு அதிமுககிட்ட வந்து சமூகநீதி குறித்தும் சனாதனம் குறித்தும் பேசுவது? ஸ்டாலினுக்கும் சனாதனம் என்றால் என்னவென தெரியாது. ஸ்டாலின் கிட்ட போய் யாரோ, உதயநிதிக்கும் சனாதனம் விவகாரத்திற்கும் பிரச்சினையாகிவிட்டது என சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர் நடிகர் சந்தானத்திற்கு போன் போட்டு உங்களுக்கும் உதயநிதிக்கும் என்னப்பா பிரச்சினைனு கேட்குறாரு. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். அடுத்த திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அதாவது ஒன்றிணைவோம் வா என்கிறார்கள், ரூ 1000 மட்டும் ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் தருவார்களாம். ஆனால் உறுப்பினர் அட்டையை வாங்க இவர்களுக்கு 15 கோடி பேர் தேவையாம்.
அரசுக்கு வரும் ஒவ்வொரு ரூபாயையும் மக்களுக்காகவே கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்தான் தலைவன். ஸ்டாலினிடம் போய் பத்திரிகையாளர்கள், நீட் எப்போது ஒழிப்பீர்கள், மின் கட்டணம் எப்போது குறையும் என கேட்டால் அவர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் சனாதனம், சமூக நீதி, இந்தி எதிர்ப்பு என்றார் விந்தியா. கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை போல் திமுக ஆட்சி நடந்து வருகிறது என்றார்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications