கோவைக்கு இதுதான் ரியல் நல்ல செய்தி.. ஏங்க வைத்த சிறுவாணி தண்ணீர்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி
கோவை: கோவை மாநகருக்கு சிறுவாணியில் இருந்து வரும் ஆகஸ்டு மாதம் வரை தண்ணீர் எடுக்க முடியும் என்றும், பில்லூர் 3-வது திட்டம் மூலம் கூடுதல் குடிநீர், கோவைக்கு வழங்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி அணை இருக்கிறது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

அங்கிருந்து கோவை மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் கோவை மாநகரம் இந்த முறை கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. கோவை மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இந்த முறை போதிய மழை பெய்யவில்லை.. இதனால் சிறுவாணி அணை அடியோடு வறண்டு போகும் அளவிற்கு மாறி உள்ளது. தற்போது மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. தற்போதைய நிலையில் பில்லூர் 3-வது திட்டம் மூலம் கூடுதல் குடிநீர் கோவைக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது..
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- "சிறுவாணி அணை பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 11.1.2023 மற்றும் 3.5.2023 ஆகிய தேதிகளில் முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ.2 கோடி கேரள அரசுக்கு வழங்கப் பட்டு உள்ளது.
சிறுவாணி நீரோடையில் எந்தவித அடைப்பும் ஏற்படுவது இல்லை.தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 868.75 மீட்டராக உள்ளது. அணையின் கடைசி நீர் இருப்பு நிலை அளவிலான 863.40 மீட்டர் வரை இரு மாநில ஒப்பந்தத்தில் குடிநீர் எடுக்க அனுமதி உள்ளது. சிறுவாணி பகுதியில் மண் படிவு என்பது மிகவும் சொற்ப அளவே உள்ளது.
கேரள நீர்ப்பாசனத்துறை நீர் எடுக்கும் வால்வை கட்டுப்படுத்தி உள்ளதால் நாள்தோறும் 40 எம்.எல்.டி. லிட்டர் அளவு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இது 102 நாட்களுக்கு அதாவது ஆகஸ்டு 8-ந்தேதி வரை இதே அளவுக்கு சீராக வழங்க முடியும். எனவே சில தகவல்கள் வெளியானது உண்மைக்கு புறம்பானது.
தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதிதாக செயல்படுத்தப்பட்டு உள்ள பில்லூர் 3-வது திட்டத்தின் மூலம் 30 முதல் 40 எம்.எல்.டி. வரை கூடுதலாக குடிநீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கோவை மாநகர மக்களுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் போதிய அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications