சூலூர் மாரியம்மன் கோவில் திருவிழா..மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அசத்தலான ஒயிலாட்டம்!
கோயம்புத்தூர்: கோவை சூலூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
கோயில் திருவிழாக்களில் எப்போதும் ஒயிலாட்டத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. கோவை சுற்றுவட்டாரங்களில் கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் அதிகம் இடம்பெறுவது வழக்கம்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாஜி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டக் குழுவினருடன் நடனமாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் இத்தகைய விழாக்களில் அண்மைக்காலமாக எஸ்.பி.வேலுமணி, ஆறுக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்காமல் இருந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அந்த கோவில் திருவிழாவில் கொங்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனமாடப்பட்டது. ஒயிலாட்டம் நடன குழுவினருடன் இணைந்து எஸ்.பி. வேலுமணியும் ஒயிலாட்டம் நடமாடினார்.
இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications