கோவையில் பதற்றம்- அமித்ஷாவே திரும்பிப் போ! காங்கிரஸ், திவிக இன்று கறுப்பு கொடி காட்டும் போராட்டம்!
கோவை: இந்தி மொழி திணிப்பு; தமிழ்நாட்டுக்கான நிதி தர மறுப்பு; அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய பேச்சு உள்ளிட்டவைகளுக்கு கண்டனம் தெரிவித்து கோவை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தருகிறார். கோவையில் சிவராத்திரி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார் அமித்ஷா. இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட பாஜக அலுவலகங்களை நாளை திறந்து வைக்கிறார் அமித்ஷா.

இதனிடையே கோவை வருகை தரும் அமித்ஷாவுக்கு இன்று கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பது; மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான நிதியை தர மறுப்பது உள்ளிட்டவைகளுக்குக் கண்டனம் தெரிவித்து இன்று கோவையில் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

கோவையில் ஹோப் காலேஜ் சிக்னல், மசக்காளி பாளையம் மெயின்ரோடு பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் அமித்ஷாவுக்கு கறுப்பு காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தப் போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications