சீமானுக்கு சின்னமும் இல்லை.. ஓட்டும் இல்லை.. அசால்ட்டாக கலாய்த்த அண்ணாமலை
கோவை: சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை, அதனால் அவர் அப்படித்தான் பேசுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நான்தான் பாஜகவுக்குள் அனுப்பினேன். அவர் என்னுடைய ஸ்லீப்பர் செல். அவர் எனக்காக கட்சியில் வேலை பார்க்கிறார் என்பது மோடி புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்" என சீமான் மதுரையில் நேற்று முன் தினம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

இதற்கு கோவை கவுண்டம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. அதனால் அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்துவிட்டார்.
சீமானை பொருத்தமட்டில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து நிற்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வர போகிறார் என்பது மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். ஆதரவெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான்.
சீமான் இப்படித்தான் பேசுவார். இதையெல்லாம் பெரியதாக கண்டுக் கொள்ளாதீர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறுகையில் கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தாலும் அது குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் பெறுவதில் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம்.
அண்ணாமலை என் ஸ்லீப்பர் செல்.. களத்தில் எனக்காக வேலை செய்கிறார்.. மோடிக்கு சீமான் சொன்ன மெசேஜ்
கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பது பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. கச்சத்தீவை பெற்றால்தான் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு கடந்த 3 ஆண்டுகளாக நேரில் சென்று அங்குள்ள உயரதிகாரிகள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நண்பர்களை சந்தித்து பேசியிருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை லோக்சபா தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவியை ஆதரித்து நேற்று கோ.புதூரில் சீமான் பரப்புரை பொதுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் அவரை பாஜகவிற்கு அனுப்பியுள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த முன்னெடுப்புகள்தான்.
அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு (சீமான்) வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள் என சீமான் பேசியுள்ளார். அவர் மேலும் பேசுகையில் தாய் மீதும் தமிழ் மீதும் உறுதியாக சொல்கிறேன். பதவிக்காகவோ பணத்திற்காகவே வந்தவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒரே ஒரு முறை எங்களை நம்பி வாக்களித்து பாருங்கள்.
6 தேர்தல்களில் 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். நாங்கள் 10 சதவீதம் பெறுவதை திமுக தடுத்தது. இஸ்லாமியர், கிறிஸ்துவர்களிடம் நான் பாஜகவின் பி டீம் என பொய்யை பரப்பினார்கள். அதனை இந்த மக்கள் நம்பினார்கள். கமல்ஹாசன், டிடிவி தினகரன் வந்ததால் எங்களது வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. என் கட்சி அங்கீகாரத்தை தடுத்தார்கள். ஊழல் லஞ்சத்தை துடைத்து குப்பைத் தொட்டியில் போடுவதுதான் எங்கள் கனவு.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றால் சைக்கிள் சின்னமும் குக்கர் சின்னமும் எப்படி கிடைத்தது. தேர்தல் ஆணையம் எவ்வளவு நேர்மையாக செயல்படுகிறது பாருங்கள். இவ்வாறு சீமான் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications