ஊதிய உயர்வு டூ தொகுப்பூதியம் வரை.. அரசுக்கு பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்களின் 7 ‘டிமாண்ட்'
கோவை: உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், பல்கலைக்கழக பன்னாட்டு மாணவர் விடுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, தொகுப்பூதியம் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கழக பணியாளர் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை செயலாளர் சங்கருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் சார்பில் தமிழக அரசு உயர்கல்வித்துறை செயலாளர் சங்கருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் கோரிக்கை
கோவை மாவட்ட ஆட்சியரால் 2025-26 ஆம் நிதியாண்டுக்கு உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 01.04.2025 முதல் நிலுவைத் தொகையுடன் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி உயர்த்தி வழங்கிட வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டு வழங்கக்கூடிய தற்காலிக தொழிலாளர்களுக்கான பொங்கல் போனஸ் ஜனவரி 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளாக நமது பல்கலைக்கழக தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் இருந்து வருகின்றது. அதனை உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.
2வது கோரிக்கை
நமது பல்கலைக்கழகப் பன்னாட்டு மாணவர் விடுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 19.11.2025 மற்றும் விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட கோப்புகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக துணைவேந்தர் அலுவலகத்தால் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளது.
3வது கோரிக்கை
தினக்கூலித் தொழிலாளர்கள் 6 பேருக்கு 01.12.2024 முதல் தொகுப்பு நிர்ணயித்து 20.12.2024 அன்று ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்தும் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியமும், நிலுவைத்தொகை வழங்கவில்லை. அதனை தொழிலாளர்களுக்கு ஆட்சிக் குழுவின் ஒப்புதலின்படியே விரைந்து வழங்கிட வேண்டும்.
4வது கோரிக்கை
நமது பல்கலைக்கழகத்திடமிருந்து கோவை, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகத்தால் 2019 ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்டு, தொழிலாளர்களின் EPF கணக்கில் செலுத்த வேண்டிய தொகை ரூபாய். 6,47,51,000/-இன்னும் தொழிலாளர்களின் EPF கணக்கில் வரவு வைக்கவில்லை. அதனை நமது பல்கலைக்கழக நிர்வாகம் திரும்ப கேட்டுப் பெற்று தொழிலாளர்களின் EPF கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் 2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நமது பல்கலைக்கழகம் EPF அலுவலகத்திற்கு தொழிலாளர்களின் கணக்கில் செலுத்த வேண்டிய அசல் தொகையை நேரடியாகவே தொழிலாளர்களின் EPF கணக்கில் பல்கலைக்கழகம் செலுத்தி வரவு வைத்திட வேண்டும்.
5வது கோரிக்கை
நமது பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிட வேண்டும்.
6வது கோரிக்கை
நமது பல்கலைக்கழக நிதிக் குழுவில் இனம் : 24 இல் 15.11.2024 அன்று 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 28 நாள் ஊதியம் கொடுத்திட 16.12.2024 அன்று ஒப்புதல் பெற்று ஆட்சிக்குழு தீர்மானத்தின் படி 28 நாள் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி குழுவின் ஒப்புதல் படி ஓராண்டுக்கான நிலுவைத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலுவைத் தொகையை கால தாமதமின்றி வழங்கிட வேண்டும்.
7 வது கோரிக்கை
பல்கலைக்கழக ஓட்டுநர்களான திரு.V.கனகராஜ் அவர்களுக்கு இரண்டு மாதம் (நவம்பர் மற்றும் டிசம்பர் 2025) மற்றும் திரு.S.மாரியப்பன் திரு.C.லட்சுமணன் ஆகியோருக்கு ஒரு மாதம் (டிசம்பர் 2025) சம்பளம் கொடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்படாமல் உள்ளது. தொழிலாளர்களின் இந்நிலை குறித்து தங்களிடம் நேரில் பலமுறை எமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தாங்கள் கன்வீனரிடம் ஒப்புதல் பெற்று விட்டதாகவும் விரைவில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்று பொங்கல் திருநாளுக்கு முன்பே சங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பின்னும் சங்கத்தால் பலமுறை தங்களிடம் வலியுறுத்தியும் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஓட்டுநர்களும் மேற்படி மாதங்களுக்கான சம்பளம் பெற முடியாமல் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் விரைந்து அந்த ஊதியங்களை வழங்கிட வேண்டும்.
அலோவன்ஸ் தொகை
மேலும் பல்கலைக்கழக ஓட்டுநர்களுக்கு வழக்கமாக கொடுக்கக்கூடிய தொகைகள் (Allowances) மற்றும் இரவு நேர ஆம்புலன்ஸ் பணிக்கான விடுப்பும் கடந்த ஐந்து மாதங்களாக எந்த விதமான காரணமுமின்றி கொடுக்க மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு படித் தொகைகள் மற்றும் ஆம்புலன்ஸ் பணி செய்தால் கொடுக்க வேண்டிய மாற்று விடுப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை
மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் எமது தொழிற்சங்கம் தங்களிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அது சம்மந்தமான கோப்புகள் பதிவாளர் அலுவலக நிர்வாகப் பணியாளர் பிரிவு துணைப் பதிவாளரால் துணைவேந்தர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டு தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் நல்லாட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கவே இந்த மாதிரியான தொழிலாளர்கள் மீதான விரோத செயல்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள்.
ஆதலால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களின் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளை இனியும் காலங்கடத்தாது உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று எமது தொழிற்சங்கம் தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கின்றது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்
















Click it and Unblock the Notifications