என்னப்பா இது? கண்ணாலேயே உரையாடல்.. அண்ணாமலைக்கு பின்னால் நின்ற நிர்வாகிகளின் அல்டிமேட் ரியாக்ஷன்!
கோவை : அண்ணாமலை எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருப்பது பாஜகவினருக்கே பெரிய ஷாக் கொடுத்துள்ளது. அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, பின்னால் நின்ற பாஜக நிர்வாகிகள் கொடுத்த குழப்ப ரியாக்ஷனும், கண்ணாலேயே பேசியதுமே இதற்கு சாட்சி.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது பாஜக. கோவையில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் இந்த முறை அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனை உறுதிசெய்யும் வகையில் கோவைக்கு அடிக்கடி சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அண்ணாமலை.

அண்ணாமலை வெளியிட்ட திடீர் அறிவிப்பு : இந்த நிலையில்தான், கோவை தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை திடீரென அறிவித்தார். இதுகுறித்து கோவையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காகத்தான் பாஜகவுக்கு நான் வந்திருக்கிறேன்.
கோவை தொகுதியில் நிற்பதற்கு பல திறமையான நபர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதே என் வேலை. பாஜகவில் ஒரு தொண்டனாக பணியாற்றவே நினைக்கிறேன். டெல்லி அரசியலுக்கு செல்ல எப்போதும் நான் விரும்பியது கிடையாது. தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விரும்பமில்லை. இந்த மண்ணிலேயே என் அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
கண்ணாலேயே பேச்சு : அண்ணாமலை இப்படி அறிவித்தபோது, பின்னால் நின்றுகொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் குழப்பமான ரியாக்ஷன்களை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அண்ணாமலை, எம்.பி தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று சொன்னதுமே, பின்னால் நின்ற நிர்வாகி, இன்னொருவரிடம் கண்ணாலேயே பேசினார்.
அதை அவர் கவனிக்காமல் நின்றதால், கையை லேசாக தட்டி அவரை திரும்பச் செய்து கண்ணாலேயே சைகையில் ஏதோ சொன்னார். என்ன இப்பவே டப்புனு சொல்லிட்டாரு என்பது போல இருந்தது. அதை ஆமோதிப்பது போல் மற்ற நிர்வாகியும் கண்ணசைத்தார். அண்ணாமலைக்குப் பின்னால் நின்ற இருவரின் முகபாவங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
முக்கிய காரணம் : அண்ணாமலை எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தான் தேர்தல் இணைப் பொறுப்பாளராக பணியாற்றினார். ஆனால், அங்கு பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

கர்நாடகாவில் பாஜக அடைந்துள்ள தோல்வி அண்ணாமலைக்கும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அண்ணாமலையை எம்.பி தேர்தலில் நிற்க வைப்பது சரியான யோசனை அல்ல என பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே அண்ணாமலை தானாகவே போட்டியிட விருப்பம் இல்லை என்பது போல பேசியுள்ளார் என்கிறார்கள்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications