கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதென்ன 3 இடங்கள்.. டாப் கியர் போட்டு தூக்கும் பாஜக.. அதிமுகவுக்கே டஃப் தந்து.. செம "மாஸ்டர் பிளான்"

கோவை தொகுதியை கேட்டு பாஜக அதிமுகவை நெருக்குகிறதாம்

Google Oneindia Tamil News

கோவை: அதிமுகவுக்கே டஃப் தரும் அளவுக்கு தமிழக பாஜக டாப் கியர் போட்டு மேலே வருகிறது.. அந்த அளவுக்கு பக்கா பிளானில் இருக்கிறது.. இப்போதும் அதுபோலவே ஒரு மாஸ் ஐடியாவை கையில் வைத்துள்ளதாம்.

கொங்கு மண்டலத்தில் அதிமுகதான் பலமாக இருக்கிறது.. அதேசமயம், இதே கொங்குவில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு ஓரளவாவது இருந்து வருகிறது..

அதேபோல, இந்து அமைப்புகளும் அங்கு சற்று பலத்துடனேயே உள்ளன.. எனவே கோவையில் சீட் வாங்கினால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு சில மாதங்களாகவே இருந்து வருகிறது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அந்த வகையில் 3 தொகுதிகளுக்கும் குறி வைத்துள்ளது.. இதனை தங்களுக்கு ஒதுக்கவும் அதிமுக தலைமையிடம் கேட்டு நெருக்கி வருகிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி கோவைக்கு வர போகிறார் இல்லையா, அதற்காக கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளதாம் பாஜக.

அழுத்தம்

அழுத்தம்

இது எதற்காக என்றால், அந்த மாஸ் கூட்டத்தை காண்பித்து, அதற்கு பிறகுதான் 3 தொகுதிகள் குறித்த பேச்சுக்கு கூடுதல் அழுத்தம் தர போகிறதாம்.. ஆனால், அதிமுக மனநிலைமையோ வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள்... இந்த தொகுதியில் ஏதாவது ஒரு இடத்தை மட்டுமே தருவதற்கு யோசித்து வருகிறதாம்.. ஆனால், பாஜகவோ 3 இடங்களை கேட்டு வருகிறது.. மிச்சமுள்ள 2 சீட்டுக்காகவே இப்படி ஒரு ஐடியா எடுத்துள்ளது பாஜக.

 தொகுதி

தொகுதி

ஆனால், 2 நாளைக்கு முன்பு அதிமுக ஒரு உத்தேச பட்டியலை வெளியிட்டிருந்தது.. அதில் அதிமுக கோவையில் தெற்கை தரவில்லை.. மாறாக வடக்கு தொகுதியை மட்டும் தந்திருந்தது... கூடுதலாக புறநகரான சிங்காநல்லூரையும் ஒதுக்கி இருந்தது.. அதனால், இப்படி ஒரு கூட்டங்களை நடத்தினால், அந்த 2 சீட்டுகளும் கிடைத்துவிடும் என பாஜக நம்புகிறதாம்..!

 தாக்கம்

தாக்கம்

எனினும், இந்த கோவையில், அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டாலும் சரி, பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டாலும் சரி, தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில், ஜிஎஸ்டி விவகாரம் உட்பட எத்தனையோ பிரச்சனைகள் சூழ்ந்து கிடக்கும்போது, அதன் பாதிப்பு வரும் தேர்தலில் கொஞ்சமாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

English summary
BJP is planning to get Three Seats in Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X