பெண்கள் கழிவறைக்குள்.. அத்துமீறிய பாஜக ஜோதி.. அலறிய பெண்.. அள்ளி சென்ற போலீஸ்.. கோவையில்!
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற, பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஒப்பந்த பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

அத்துமீறினார்
அப்போது அந்த தொழிலாளியை பின்தொடர்ந்து கழிவறைக்குள் சென்றுள்ளார், ஜோதி என்ற ஆண். இவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவராம். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பெண்கள் கழிப்பறை என தெரிந்தும், அத்துமீறி, ஜோதி அங்கு நுழைந்துள்ளார். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்து பெண் துப்புரவு தொழிலாளியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

கூச்சல்
கழிவறை என்றும் பாராமல், அங்கு வைத்தே, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கத்தியுள்ளார். அலறல் சத்தம் அதிகரித்ததால், கோபமடைந்த ஜோதி பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் காயமடைந்தார். அதற்குள் யாராவது வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஜோதி அங்கேயிருந்து தப்பியோடிவிட்டார்.
Recommended Video

போலீஸ்
இதனையடுத்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளி புகார் அளித்தார். ஜோதியின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம், கொலை முயற்சி, கொடும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, அதிரடியாக கைது செய்தனர் போலீசார்.

பிரமுகர்
கைது செய்யப்பட்ட ஜோதி, பாஜகவின் எஸ்சி-எஸ்டி பிரிவின் கோவை மாவட்ட தலைவராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் இருக்கிறார். இந்த சம்பவம், கோவை பாஜகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications