“இதை அப்பவே செஞ்சிருக்கனும்.. இப்ப வந்து சொன்னால்?” முதலமைச்சர் பேச்சுக்கு பரபரத்த வானதி சீனிவாசன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்
கோவை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை சிலர் அகற்ற நினைக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இதற்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரூ.10.50 கோடி மதிப்பிலான புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(மார்ச்.07) பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனையடுத்து ஒழுகினசேரியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து பேசிய அவர், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 22 மாதங்கள் நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சி தமிழ்நாட்டிற்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் குறித்து அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இந்த ஆட்சியை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் நம்மை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர் இந்த ஆட்சி இப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறதே, திராவிட மாடல் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்களே, தொடர்ந்து இவர்களை ஆட்சி நடத்த விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது என்று எண்ணி, நம்முடைய ஆட்சியின் மீது புழுதி வாரித் தூற்றி கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு ஆபத்து
ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்காவது ஜாதி, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? மக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் ஈடுபட்டு அவர்கள் சதி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

வடமாநில தொழிலாளர்கள்
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "வடமாநில தொழிலாளர் விவகாரம் ஜனவரியிலிருந்து நடக்கிறது. இதில் மாநில அரசோ முதலமைச்சரோ கருத்து தெரிவிக்காமல் இருந்து விட்டு பிரச்னை பெரியதாக வெடித்த பின்னர் நடவடிக்கை எடுக்கின்றனர். தொடக்கத்திலேயே இந்த விஷயத்தை கிள்ளி எறிந்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.

யார் காரணம்?
இப்படி இருக்கையில் இப்பிரச்னையை சரியாக கையாள தெரியாததால் இந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியை பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்துவதைபோல, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்திலும் இந்த பகுதி பாதிப்படையட்டும் என்று தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. ஆட்சிக்கு ஆபத்து என்று தற்போது அவர் பேச தொடங்கியுள்ளார். இதற்கு யார் காரணம்? வடமாநில தொழிலாளர்கள் குறித்து யார் மோசமான கருத்துக்களை கூறியது? தமிழக அமைச்சர்களே வடமாநில தொழிலாளர்கள் குறித்து விமர்சனம் வைக்கின்றனர்.

நடவடிக்கை
இந்த விமர்சனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களையும் பரப்புகின்றனர். ஆக இப்படி வெறுப்புணர்வு பிரசாரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு தற்போது ஆட்சிக்கு ஆபத்து என்று கூறினால் அதற்கு யார் பொறுப்பு? இந்த சூழலை உருவாக்கியது அவர்கள்தான். இதனை சரி செய்ய வேண்டியதும் முதலமைச்சர்தான். எனவே அடுத்தவர் மீது பழிபோடும் முயற்சியை முதலமைச்சர் செய்யக் கூடாது. வடமாநிலத்தில் இருந்து இங்கு வேலைக்காக வருபவர்களும் இந்தியர்கள்தான். எனவே அவர்கள் குறித்து விமர்சிக்கும் வகையில் அமைச்சர்கள் பேசினால் அதை தடுக்க முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
செவ்வாழை கிலோ ரூ.60.. பொள்ளாச்சியில் சர்ப்ரைஸ்.. கிடுகிடுவென ஏறிய விலை! கோவை விவசாயிகளுக்கு ஜாக்பாட் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications