கோவை வெள்ளலூரில் 9 லட்சம் டன்.. விஷமாகும் மண்.. அதிர வைத்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில், இனிமேல் புதிய குப்பைகளை கொட்டக்கூடாது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால், வெள்ளலூரும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் சுகாதாரச் சீர்கேட்டால் தத்தளித்து வருகிறது. பழைய குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரின் உப்புத் தன்மையை மாற்றி, அதை முற்றிலும் பாழ்படுத்தி உள்ளது.
கோவை மாநகரின் குப்பை கிடங்கு என்றால், அது வெள்ளலூர் குப்பை கிடங்கு தான். இந்த குப்பை கிடங்கால் வெள்ளலூர் பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீண்டகாலமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக்கூட கோவை மாநகராட்சி நிர்வாகம் முறையாகச் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு புகாரும் பறந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
சமீபத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேரில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்திய தகவல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நிலத்தடி நீரைச் சிதைத்த 9 லட்சம் டன் குப்பை
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான கியூபிக் டன் பழைய குப்பைகள் திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தக் குப்பைகளைச் சுத்திகரித்து அகற்ற வேண்டிய எம்.சி.சி பிளான்ட் செயல்படாமல் முடங்கிக் கிடந்ததும் தெரியவந்துள்ளதாம்.
காற்று மாசு அதிகம்
தினமும் 110 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே உள்ள பழைய குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரின் உப்புத் தன்மையை மாற்றி, அதை முற்றிலும் பாழ்படுத்தி உள்ளதாம். மேலும், நான்கு இடங்களில் காற்று மாசு பரிசோதனை செய்யப்பட்டதில், இரண்டு இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விடக் காற்று மாசு மிகவும் அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியின் மீறல்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து மாநகராட்சி பெற்றிருந்த அனுமதி 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியே காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. காய்கறிக் கழிவில் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் சிறிய அளவில் எரிவாயு தயாரிக்கும் மையமும் உரிய அனுமதியின்றி இயங்கி வருகின்றன. குவித்து வைக்கப்பட்டிருக்கும் 9.40 லட்சம் கியூபிக் டன் பழைய குப்பையில், இதுவரை வெறும் 70 ஆயிரம் டன் மட்டுமே பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சி பின்பற்றவில்லை
திடக்கழிவு மேலாண்மை விதிகளின் நடைமுறையில் பெரும்பான்மையானவற்றை மாநகராட்சி பின்பற்றவில்லை என்றும், இதன் காரணமாகப் பொதுச் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.. இந்த தகவல்கள், வெள்ளலூர் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் -
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications