Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈசிஆர் ரோட்டில் "கைமாறிய" ஜோடி.. சென்னை டூ கோவை சரவணம்பட்டியில் யாரந்த "கவர்ச்சி" பெண்.. சபாஷ் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. கவர்ச்சி விளம்பரம் ஒன்றை தந்துள்ளார். இதைப்பார்த்து ஏகப்பட்ட இளைஞர்கள் கிறங்கி விழுந்துள்ளனர்.

சென்னையில் 3 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. நாம்கூட அதை பற்றி நிறைய செய்திகளை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து, தங்களது மனைவிகளை மாற்றி கொள்ளும் நிகழ்வு ஒன்று நடந்தது. சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்டுகளில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

Chennai ECR Road and Coimbatore Saravanampatti Dating Cafe Advt, Do you know Who is this Young Woman

அதாவது, எல்லா பணக்காரர்களும் தங்கள் மனைவியுடன் ஜோடியாக இங்கு ஒன்று கூடுவார்களாம்.. அனைவரது கைகளிலும், அவர்களது கார் சாவி இருக்கும்.. பிறகு, எல்லாரும் சேர்ந்து அந்த சாவியை குலுக்கலில் போடுவார்கள்..

குலுக்கல் முறை: யார் கையில், எந்த வீட்டு கார் சாவி கிடைக்கிறதோ, அந்த சாவிக்குரிய மனைவியை மாற்றிக் கொள்வார்கள்.. 'மீவீ' என்ற ஆப் மூலம்தான் இந்த விளையாட்டு ஃபேஸ்புக்கில் அப்போது நடந்தது.. குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, அவர்களுடன் அன்றைய இரவு முழுவதும் ஜாலியாக இருப்பார்கள்.. விருப்பம் இருந்தால், அதை போட்டோ, வீடியோவும் எடுத்து அவர்களுக்குள் ஷேர் செய்து கொள்வதுதான் இவர்களது வாடிக்கையாகவும் இருந்திருக்கிறது.

சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர் இந்த விளையாட்டில் கலந்து கொள்வதற்காகவே திரண்டு வருவார்களாம். ஜோடிகளை மாற்றி விளையாடும் இந்த ஆபத்தான, அசிங்கமான விளையாட்டை பற்றி கேள்விப்பட்டதுமே தமிழக மக்கள் இடிந்து போய்விட்டார்கள். பிறகு இது தொடர்பாக பலரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

பண்ணை வீடு: இந்த சம்பவத்துக்கு பிறகும்கூட, ஈசிஆர் ரோட்டில் உள்ள சில வீடுகளில் பாலியல் அக்கிரமங்கள் நடந்து வருகின்றன.. போலீசாரும் உரியவர்களை கைது செய்து வருகிறார்கள். கடந்த மாதம்கூட ஒரு கும்பல் சிக்கியது.

சென்னை, ஈசிஆர், பனையூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தது இந்த ஜோடி.. பிறந்த நாள், திருமண நாள் என்றெல்லாம் சாக்கு வைத்து, இந்த வீட்டில் பார்ட்டி வைத்துள்ளது.. அத்துடன் ஜோடிகளை மாற்றி அட்டூழியம் செய்திருக்கிறது.. பாலியல் அட்டகாசமும் நடந்துள்ளது. இந்த போலி ஜோடியையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை சம்பவம்: இதோ, இதைவிட புது தினுசாக இன்னொரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.. சிங்கிளா வந்தால் ஜோடி ரெடியாக இருக்குமாம்... ஜோடியாக வந்தால், ஜாலி டேட்டிங் இருக்குமாம்.. இப்படி ஒரு விளம்பரத்தை செய்தது ஒரு பெண் ஆவார்.

கோவை சரவணம்பட்டியில் பிரபலமான "கபே" ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு டீ, காபி, கேக், ஜூஸ் விற்கப்பட்டு வருகின்றன.. ஆனால், பார்க்கிறது ஜூஸ் கடை போலவே இருக்காது.. கிட்டத்தட்ட ரிசார்ட் செட்டப்பில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது இந்த கடை.. தற்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் என்பதால், டேட்டிங் பார்ட்டி இங்கு நடத்தப்படுகிறது.. இதற்காக ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்: புத்தாண்டில் இருந்து நீங்கள் ஜாலியாக டான்ஸ் ஆடி, டீ, காபி குடிக்கலாம்.. உங்களுடன் இளம்பெண்கள் டான்ஸ் ஆடுவார்கள், சிங்களா வந்தால் அந்த பெண்களுடன் ஜோடி சேரலாம்.. உங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது.. இந்த அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவியது.. உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் என பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்தனர்..

அதுமட்டுமல்ல, சரவணம்பட்டி, கோவில்பாளையம், சின்னவேடம்பட்டி என பல்வேறு பகுதியில், ஏராளமான ஐடி இளைஞர்கள், வேலை பார்த்து வருகிறார்கள்.. இவர்களும் டேட்டிங் செய்து ஆர்வமாக காத்திருந்தனர்.. டேட்டிங் கபேக்கு எப்படி போவது? டான்ஸ் ஆடும் பெண்கள் யார்? தனியாக வரும் பெண்கள் யார்? அந்த பெண்கள் எப்படி இருப்பார்கள்? போட்டோ இருக்கிறதா? என்றெல்லாம் சரவணம்பட்டி மக்களிடம் விசாரித்துள்ளனர்..
டேட்டிங் சமாச்சாரம்: அவர்கள் இப்படி விசாரித்தபோதுதான், இப்படி ஒரு டேட்டிங் சமாச்சாரமே தங்கள் ஏரியாவில் நடப்பது சரவணம்பட்டி மக்களுக்கு தெரியவந்திருக்கிறது.. இதனால் ஆவேசப்பட்ட மக்கள், நேரடியாக கமிஷனர் ஆபீசுக்கே சென்று புகார் தந்தனர்.

இதையடுத்து, சரவணம்பட்டி போலீசார் "டேட்டிங் கபே" தொடர்பான விசாரணையில் இறங்கினர். நியூ இயர் ஜாலிக்காக இப்படி புரோகிராம் ஏற்பாடு செய்தோம், இதற்கு முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம் என்றெல்லாம் டேட்டிங் கபே தரப்பில் சொன்னார்கள். ஆனாலும், இளம்பெண்களை அழைத்து வந்து டான்ஸ் ஆட வைப்பதே தப்பு.. இதற்கு எப்படி அனுமதி தர முடியும்? என்று போலீசார் எச்சரித்தனர். பிறகு இந்த டேட்டிங் விழா ரத்து செய்யப்பட்டது.

யார் அந்த பெண்: ஆனால், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது. அவர் யார் என்று தெரியவில்லை.. பெங்களூரில் இருக்கிறாராம்.. இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விளம்பரம் செய்தது இந்த பெண்தானாம்.. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால், விபச்சாரம் நடத்தும் வகையில் திட்டமிட்டே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாம்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, சரவணம்பட்டி பகுதிகளில், போலீசாரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. காரணம், இந்த சரவணம்பட்டி பகுதியை பொறுத்தவரை, நிறைய ஐடி கம்பெனிகள் இங்கு உள்ளன.. இளைஞர்கள் பலர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.. இவர்களை குறிவைத்து, மசாஜ் சென்டர், ரிசார்ட்ஸ் போன்ற ஏகப்பட்ட இடங்களில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் குவிந்து வருகிறதாம்.. இதையும் நம்முடைய போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+