கோவை மக்களின் தாகம் தீர சிறுவாணி தண்ணீர்.. திறந்து விட்ட கேரளா.. நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை உடனடியாக திறந்துவிட்டுள்ளது.
கோவை: சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை திறந்துவிட்டமைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்ப்பதற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட கேரளா முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார் தமிழக முதல்வர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில் கோவை நகர மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரம் சிறுவாணி அணையாகும். தற்போது, கோவை மாநகராட்சி பகுதிக்கு ஒரு நாளில் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் சிறுவாணி அணையில் இருந்து வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக கடந்த 1973-ம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழகம்-கேரளா இடையில் போடப்பட்ட இந்த 99 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்த ஜூன் 30ஆம்ந் தேதி வரை ஆண்டுக்கு 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீர் தரப்பட வேண்டும்.

சிறுவாணி அணை
இந்நிலையில், கேரளாவின் நீர்ப் பாசனத்துறையானது, சிறுவாணி அணையின் அதிகபட்ச நீர் இருப்பு அளவை, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நீர் இருப்பு அளவான 878.50 மீட்டருக்குப்பதில் 877 மீட்டராக தொடர்ந்து பராமரித்து வருகிறது. குறைக்கப்பட்ட அளவான 1.5 மீட்டரின் மூலம், 122.05 மில்லியன் கன அடி நீர் பற்றாக்குறையாகி உள்ளது. இது ஒட்டுமொத்த பற்றாக்குறை அளவில் 15 சதவீதமாகும்.

குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல்
இது கோடைக்கால மாதங்களில் கோவையின் குடிநீர் தேவையை சமாளிப்பதில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 1.30 டி.எம்.சி.க்கு பதில், 0.484 டி.எம்.சி.யில் இருந்து 1.128 டி.எம்.சி. வரை மட்டுமே ஆண்டுதோறும் நீர் வழங்கப்படுகிறது. கோவை நகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில் அணையின் கொள்ளளவை 878.50 மீட்டராக உயர்த்த வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் கோவை நகருக்கு நேற்று வரை 50 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கி வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரள அரசு மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 7.30 மணிக்கு ஒப்பந்தப்படி கோவை நகருக்கு வழங்க வேண்டிய 101.40 எம்.எல்.டி. குடிநீரை திறந்து விட்டனர். இதன் காரணமாக கோவை பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications