கோவையில் “பகீர்”.. 2.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை.. பீகாரை சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் கைது!
கோவை: பீகாரில் இருந்து குழந்தையை வாங்கி வந்து கோவையில் 2.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் விவசாய வேலைகளைச் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் ஆலை முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

விவசாய வேலை செய்து வரும் விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி வைத்து உள்ளார். இந்நிலையில், அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் தயாரித்து, எந்த சட்டச் சிக்கலும் இன்றி குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளனர்.
இதற்கு விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவலை சொல்லி உள்ளார். பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பீகாரில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூருக்கு கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர்.
அவர்கள் ஏற்கனவே பேசியபடி விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலைக்கு விற்றுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி உள்ள நிலையில், மீதம் உள்ள 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருந்துள்ளது.
இந்நிலையில், திடீரென விஜயன் வீட்டுக்கு குழந்தை வந்தது தொடர்பாக அரசல் புரசலாக வெளியில் கசிந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார். தகவல் அறிந்து வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வரப்பட்டு கோவையில் விற்பனை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
பின்னர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். குழந்தையை விற்பனை செய்த அஞ்சலி, மகேஷ் குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒரு பெண் குழந்தை மட்டுமின்றி, மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மேலும் போலீசார் பீகார் சென்று பீகாரில் இருந்த பூனம் தேவி மற்றும் மேகா குமாரி ஆகியோரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1,500 ரூபாய் கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்துள்ளனர்.
அந்தக் குழந்தையைத் தான் கோவையில் ரூபாய் 2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை வாங்கிய விஜயனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் மேலும் ஏதாவது குழந்தை விற்பனை செய்யப்பட்டதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications