ஆட்டோவில் வந்த 2 பெண்கள்.. விடிய விடிய நாசப்படுத்தினர்.. திருநாவுக்கரசு குறித்து திடுக் தகவல்கள்!
பண்ணை வீட்டு பகுதி மக்கள் திருநாவுக்கரசு பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டனர்
Recommended Video
கோவை: "ஆட்டோவில் வந்த 2 இளம்பெண்களை இரவு முழுவதும் மிரட்டி மிரட்டி நாசம் செய்தார்கள் திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும்.. ஊருக்கு போக கூட அவர்களிடம் காசு இல்லை' என்று சிபிஐ அதிகாரிகளிடம் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை சொல்லி உள்ளனர்.
திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் சிபிஐ அதிகரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.
இது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம்.

பண்ணை வீடு
நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்போது அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினார்கள்.

ஜன்னல்கள்
திருநாவுக்கரசு பண்ணை வீடு வித்தியாசமாக உள்ளதாம். வீட்டின் உள்ளே ஸ்பீக்கர் பெட்டிகள் சத்தம் வெளியே கேட்க முடியாத அளவுக்கு ஜன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கிறதாம். அந்த கண்ணாடியை கூட சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை வீடியோவும் எடுத்து கொண்டனர்.

பாட்டு சத்தம்
அப்போதுதான் பாலியல் விவகாரத்தில் வெளியான ஒரு பெண்ணின் வீடியோ திருநாவுக்கரசு வீட்டில் பதிவு செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். நடுராத்திரி திருநாவுக்கரசு நண்பர்களுடன் பைக்குகளில் பண்ணை வீட்டுக்கு வருவதையும், வீட்டில் பாட்டு சத்தம் கேட்பது குறித்தும் அங்கிருந்தோர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் பல திடுக் தகவல்களை சொல்லி உள்ளனர்.

ஏடிஎம் கார்டுகள்
"கடந்த 2 வருஷத்துக்கு முன்பு அதிகாலை நேரத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு 2 இளம்பெண்கள் ஆட்டோவில் வந்தார்கள். திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் மிரட்டி மிரட்டி தங்களை அனுபவித்ததாகவும், தங்களிடமிருந்த பணம், ஏடிஎம் கார்டுகளை பறித்து கொண்டார்கள் என்றும் எங்களிடம் அழுதார்கள்.

200 ரூபாய்
சொந்த ஊருக்கு திரும்பி செல்லகூட தங்களிடம் பணம் இல்லை என்று அங்கிருந்தோரிடம் எங்களிடம் கண்ணீர்விட்டு சொல்லவும், அந்த பெண்களுக்கு தலா 200 ரூபாய் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தோம்" என்றனர். இதையடுத்து தொடர்ந்து திருநாவுக்கரசு சம்பந்தப்பட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தும், விசாரித்தும் வருகிறார்கள்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications