15ஆம் தேதியானா ரூ.1000! யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்? செந்தில் பாலாஜி சொன்ன தகவல்
கோவை: விடுபட்ட தகுதியுடைய மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் யாரிடம் எல்லாம் மனுக்கள் பெறப்பட்டதோ? அதில் தகுதி உடைய அனைவருக்கும் நாளை முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இது துவங்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி
எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சியும் அவர்களது கருத்துக்களை கூறுவார்கள். அவர்கள் கூறுவதற்கு உரிமை உண்டு. அது அவருடைய ஆசை. 2026 வாக்கு எண்ணிக்கையின் பொழுது தான் என்ன ரிசல்ட் என்பதை அவர் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனையை முன்னெடுத்து வருகிறது.
பாஜக விமர்சனம்
பா.ஜ.க அரசை பொருத்த வரை தமிழர்களிடம் அவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை தெரிந்து கொண்டனர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தற்பொழுது தேர்தல் ஆணையம் ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கிறது. எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தமிழ்நாடு என்பது பெரியார் மண், அறிஞர் அண்ணாவின் மண், கலைஞர் மண் எனவே பா.ஜ.க வின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது.
செந்தில் பாலாஜி
என்ன செய்தாலும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு நடந்து முடிந்தது தான் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல். அந்த தேர்தலில் கிடைத்த வெற்றி தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் கிடைக்கக் கூடிய வெற்றி. சென்னையில் அதிகப்படியான போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என்று அண்ணாமலை கூறுவதே தவறு. எந்த அடிப்படையில் அவர்களை போலி வாக்காளர்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்
திமுக அரசு
விஜய் தி.மு.க கட்சியை மட்டும் விமர்சித்து பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் அனைத்து காலங்களிலும் ஒவ்வொரு முறையும் தி.மு.க.வை தான் ஒழிப்பேன் என்று கூறுவார்கள், பழைய கால வரலாறுகளை எடுத்தால் கூட அவர்கள் போட்டியாக நினைப்பது தி.மு.க வை தான். அவ்வாறு தி.மு.க வை போட்டியாக நினைத்தால் தான் தங்களால் வளர முடியும் என்பது அவர்களுக்கான குறிக்கோளாக கையில் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் எந்தக் காலமும் தி.மு.க வை வீழ்த்தி விட முடியாது.
தி.மு.க கூட்டணி
வீழ்த்து விட நினைப்பவர்கள் அவர்கள் தான் வீழ்வார்களே தவிர தி.மு.க என்பது 75 ஆண்டு காலம் மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சென்ற இயக்கம். முதல்வர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார் கோவையிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். யாரிடமெல்லாம் மனுக்கள் பெறப்பட்டதோ? அதில் தகுதி உடைய மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அரசை பொருத்தவரை எந்த திட்டங்களும் உரிய காலத்திற்கு முன்பு சேர்க்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் கட்டளை. அதன்படி தான் அனைத்து துறைகளும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது" என்றார்.
-
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி












Click it and Unblock the Notifications