Target Kovai: கோயம்புத்தூருக்கு திமுக குறி! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மென்ட்!
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஸ்டாலின் பேசியது என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னைக்கு அடுத்து தொழில் நகரம் என அழைக்கப்படுவது கோவை. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பனியன் கம்பெனி உள்ளிட்டவை உள்ளன.
கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோயமுத்தூர் வடக்கு, கோயமுத்தூர் தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளாகும்.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி தொகுதியாக சென்று வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் தொகுதியில் உள்ள பிரச்சினைகள், தொகுதியில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு, எதிர்க்கட்சிகளின் பலம், உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதியின் மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
"உடன்பிறப்பே வா" என்ற பெயரில் ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகளை அதன் பொறுப்பாளருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார்.
அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிள் முன்னிலையில் மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் (2021) அதிமுக அதிக தொகுதிகளில் வென்றது. தொண்டாமுத்தூரில் அதிமுக, கோயம்புத்தூர் தெற்கில் பாஜக, கோவை வடக்கில் அதிமுக, கவுண்டம்பாளையத்தில் திமுக, சூலூரில் பாஜக, சிங்காநல்லூரில் திமுக, மேட்டுப்பாளையத்தில் அதிமுக, வால்பாறையில் காங்கிரஸ், பொள்ளாச்சியில் திமுக, கிணத்துக்கடவில் அதிமுக கட்சிகள் வென்றுள்ளன.
இதில் திமுக 3 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. மீதமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் அதிமுகவும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சியான பாஜகவும் வெற்றி பெற்றது.
எனவே இந்த முறை 10 தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications