கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பியூஷ் கோயலுக்கு போனை போடுங்க! ஆன் தி ஸ்பாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்! என்ன விவரம்?

Google Oneindia Tamil News

கோவை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் தொலைபேசி மூலம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே இது தொடர்பாக கடிதம் எழுதியதுடன் கனிமொழி தலைமையில் எம்.பி.க்களைடெல்லிக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஜவுளித்தொழில் செய்வோர் தங்கள் பிரச்சனைகளை அவரிடம் முறையிட்டதை அடுத்து ஆன் தி ஸ்பாட்டில் மத்திய அமைச்சரிடம் பேசியிருக்கிறார்.

 தொலைபேசியில் பேச்சு

தொலைபேசியில் பேச்சு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்
பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள்
குறித்து எடுத்துரைத்தார்.

 நூல் விலை உயர்வு

நூல் விலை உயர்வு

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின்
பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை
உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கியும் இன்று காலை ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பினார்..

 ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் கடிதம்

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல்
விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்
தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி,
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்கள் ஒன்றிய நிதித்துறை அமைச்சரை நேற்று இது தொடர்பாக சந்தித்து,
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை
எடுக்கக்கோரி முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அளித்துள்ளார்கள்.

Recommended Video

    Perarivalan தாய் Arputhammal தாய்மையின் இலக்கணமாக இருக்கிறார் - முதல்வர் Stalin பாராட்டு
    ஆன் தி ஸ்பாட்

    ஆன் தி ஸ்பாட்


    பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் மிகவும்
    பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம்
    அப்பகுதி நெசவாளர்கள் முறையிட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தான் ஆன்
    தி ஸ்பாட்டிலேயே பியூஸ் கோயலுக்கு போனை போட்டு நிலைமையை எடுத்துச்
    சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

    English summary
    Cm Stalin talks on the phone with Union Minister Piyush Goyal to controlthe price of cotton and yarn
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X