கோயம்புத்தூர் அருகே நள்ளிரவில் விருந்துக்கு போன யானை.. முகத்தை பாருங்க.. நம்பவே மாட்டீங்க
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டப் பகுதியில் நேற்று நள்ளிரவு உணவு தேடி ஒரு ஒற்றைக் காட்டு யானை வந்தது. இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த அவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர். வனத் துறையினரின் முயற்சியால் எந்தவித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி மற்றும் விவசாய நிலப்பரப்பை உடையவையாக உள்ளன. இங்கு மாலுமிச்சம்பட்டி வனப்பகுதி, போளுவாம்பட்டி வனப்பகுதி, சிறுவாணி வனப்பகுதி என மூன்று வகையான வனப்பகுதிகள் உள்ளன. மூன்றுமே அடர்ந்த வனப்பகுதியாகும்.

இங்கு யானைகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. இதில் யானைகள் உணவு தேடி அடிக்கடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி கிராமங்களுக்கு வந்துவிடும். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வீடு புகுந்து சாப்பிடுகிறது. அதேபோல் வேளாண் பயிர்களையும் சாப்பிடுவதுடன், சேதப்படுத்தவும் செய்கிறது. அடிக்கடி தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமங்களில் யானைகளை பார்க்க முடியும்.
அந்த வகையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு உணவு தேடி ஒரு ஒற்றைக் காட்டு யானை வந்தது. அப்பொழுது சாப்பிட ஒன்றும் கிடைக்காததால் சோகத்தில் நடந்து செல்வது போன்று சென்றது. அந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த விவசாயி ரவி என்பவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின் தொடர்ந்து வந்த வனத் துறையினர் யானையை வனப்பகுதிக்குள் சென்றதை கண்காணித்தனர், வனத் துறையினரின் முயற்சியால் எந்தவித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை வனப்பகுதிக்குள் செல்லும் போது ஒரு யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அடிக்கடி யானைகள் வந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானைகள் வனப்பகுதியில் இருந்து வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications