கோவைக்கு இனி சுக்கிர திசை.. டேக் ஆஃப் ஆன விமான நிலைய விரிவாக்கம்
கோவை: கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் விமான நிலைய விரிவாக்கம் நீண்ட வருடங்களாக நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.
கோவை மாவட்டம் தொழில் நகரம், கொங்கு மண்டலத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பெருமையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து தொழில்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வரும் மாவட்டமாக கோவை இருந்து வருகிறது. குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், ஐ.டி, தங்கநகை உற்பத்தி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை சத்தமே இல்லாமல் வளர்ச்சியடைந்து வருகிறது.

விமான நிலைய விரிவாக்கம்
மேலும் இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலிலும் கோவை இருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், ரயில் நிலையம் புனரமைத்தல், புதிய ரயில் முனையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.
அதிலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் திட்டம் நீண்ட வருடங்களாக காத்திருப்பில் உள்ளன. கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். பெயரளவுக்கு மட்டுமே கோவை சர்வதேச விமான நிலையமாக உள்ளது.
வசதிகள் குறைவு
தற்போதைய நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூர், புனே, டெல்லி, மும்பை, கோவா, அகமதாபாத் உள்ளிட்ட உள் நாட்டு பகுதிகளுக்கும் சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் புனே, கொச்சி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் வசதிகளுடன் ஒப்பிடும் போது கோவை விமான நிலையத்தின் வசதிகள் குறைவாகவே உள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே நீண்ட காலமாக மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றில் விமர்சனங்கள் இருந்தன. கடந்தாண்டு திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான நிபந்தனைகளை தளர்த்தியது. இதன் மூலம் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வருடமாக பெரிய முன்னேற்றம் இல்லை.
தடுப்பு சுவர் பணிகள்
கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு, வெளி மாநில, வெளி நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு விமான நிலைய விரிவாக்கம் முக்கியம் என்று தொழில்துறையினர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்றார். தற்போது அதில் நல்ல செய்தி கிடைத்துள்ளது.
கோவை விமான நிலையத்தை 4 மடங்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம், 3,800 மீட்டரில் ஓடுபாதை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். விமான நிலைய விரிவாக்கத்திற்காக 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதைச் சுற்றி பிரம்மாண்ட தடுப்பு சுவர் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் அடுத்தடுத்து முழு வீச்சில் நடக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications