ஸ்டாலின் அறிவித்த 10வது நாளில்.. அவிநாசி சாலை மேம்பாலம் நீட்டிப்பு பணி தொடக்கம்
கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் 5 கிமீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 தொலைவு பாலத்துடன் இணைந்து கட்டப்படுகிறதா அல்லது 5 கிமீ தொலைவுக்கு மட்டும் தனியாக பாலம் கட்டப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கான முதல்கட்ட பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு, ரூ.1,621 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்பால கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பாலம் 17.35 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.

கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஜிர்ஜி பள்ளி, கேஎம்சிஹெச் மருத்துவமனை, பிஎஸ்ஜி கல்லூரி, லட்சுமி மில்ஸ் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது வரை சுமார் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் மேம்பாலம் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேம்பாலம் பணிகள் தொடங்கும்போதே, அதை நீலாம்பூர் வரை 5 கிமீ தொலைவுக்கு நீட்டிக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். விமான நிலையத்தை விரைந்து அடைவதற்காகவும், அந்தப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையிலும் மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவிநாசி சாலை மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ரூ. 600 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெரியளவு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது. குறைந்தளவிலான நிலம் தான் தேவைப்படுகிறது. என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முதல்வர் மேம்பாலம் நீட்டிப்பு என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த பாலம் எப்படி கட்டப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தின்படி, கோல்டுவின்ஸ் பகுதியில் ரேம்ப் கட்டவுள்ளனர். எனவே, ரேம்ப் திட்டத்தை கைவிட்டு அதை அப்படியே கோல்டுவின்ஸ் வரை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் நீலாம்பூரில் இருந்து கோவை நகரை நோக்கி வரும் வாகனங்கள், விமானநிலைய சந்திப்பில் இறங்க முடியாது. ஃபன்மால் சந்திப்பில் உள்ள இறங்குதளத்தில் இறங்கி, யூடர்ன் அடித்து விமான நிலையம் வர வேண்டும்.
அதேபோல உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையம் வரும் வாகனங்கள் கேஎம்சிஹெச் மருத்துவமனை சந்திப்பில் உள்ள இறங்கு தளத்தில் இறங்கியோ அல்லது கோல்டுவின்ஸில் இறங்கி யூடர்ன் அடிக்க வேண்டும். இப்படி பல சிக்கல்கள் உள்ளன. அதனால் பாலத்தை அப்படியே நீட்டிப்பதா அல்லது புதிய பாலம் அமைக்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது.
இந்நிலையில் முதல்கட்டமாக கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மழை பெய்தால் பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்தப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதனுடன் பாலத்தை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை பாலத்தை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications