உங்க அசல் ஆவணம் வங்கியில பத்திரமா இருக்கா? கோவையில் பகீர்.. 13 லட்சம் அபராதம் தந்த கோர்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உயில் ஆவணத்தை அடகு வைத்துப் பெற்ற கடனை வட்டிக்கு மேல் வட்டி கட்டி மீட்டும், அசல் பத்திரத்தைத் தராமல் "காணவில்லை" என்று அலட்சியம் காட்டிய வங்கிக்கு, ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆவணத்தைத் தரும் வரை நாளொன்றுக்கு ரூ. 5,000 அபராதம் என்ற இந்த அதிரடித் தீர்ப்பு வங்கி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தேவராயபுரம், கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது அப்பா கிருஷ்ணசாமி, தனது விவசாய நிலத்தை மகள் பாக்கியலட்சுமி பெயரில் முறையாக உயில் பத்திரம் எழுதி பதிவு செய்திருந்தார்.

Coimbatore Bank Farmer Original Will Document Lost Consumer Court 13 Lakh Compensation Banking Negligence Property Documents Missing News Bank Fine Legal Victory 13

அப்பாவின் மறைவுக்குப் பிறகு அந்த நிலத்தை பாக்கியலட்சுமி அனுபவித்து வந்த நிலையில், விவசாயத் தேவைகளுக்காக கடன் பெற முடிவெடுத்தார். அதன்படி, நரசீபுரம் கிளையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இண்டியா வங்கியை அவர் அணுகியுள்ளார்.

கோவை வங்கி அசல் உயில்

கடன் பெறுவதற்காக, தன்னிடம் இருந்த அசல் பதிவு செய்யப்பட்ட உயில் ஆவணம் மற்றும் தேவையான இதர ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாய கடன் பத்திரத்தை (MOD) பாக்கியலட்சுமி ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதனடிப்படையில் அவருக்கு 6 லட்ச ரூபாய் விவசாய கடன் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது, வங்கிக் தரப்பில் நிலுவைத் தொகையைச் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

கண்ணீர் வடித்த விவசாயி

தன்னுடைய அசல் உயில் பத்திரத்தை மீட்பதற்காக, பாக்கியலட்சுமியின் மகன் சுரேஷ்குமார், 2025 ஜூன் 26 அன்று தனது வங்கி கணக்கிலிருந்து 7 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை வங்கிக்குச் செலுத்தி கடனை முழுமையாக முடித்தார். கடன் தொகை முழுமையாகச் செலுத்தப்பட்டதால், அடமானமாக வைக்கப்பட்ட உயில் பத்திரத்தைத் திரும்பப் பெற பாக்கியலட்சுமி வங்கிக்கு சென்றார்.

ஆனால், அங்கு அவருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. கடனை முடித்த பிறகும் அடமானப் பத்திரத்தை ரத்து செய்யாமல் வங்கி நிர்வாகம் இழுத்தடித்ததோடு, ஒரு கட்டத்தில் "உயில் பத்திரம் காணவில்லை" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளது.

கோர்ட் தந்த அதிரடி தீர்ப்பு

வங்கியின் இந்த பொறுப்பற்ற செயலால் மனமுடைந்த பாக்கியலட்சுமி, பலமுறை அலைக்கழிக்கப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் மாதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு, வங்கியின் சேவை குறைபாட்டைக் கடுமையாகச் சாடியது.

நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சட்டப்படி, மிக முக்கியமான ஆவணமான உயிலைத் தொலைத்ததற்காக வங்கி நிர்வாகம் 12 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகையை இரண்டு மாத காலத்திற்குள் வழங்கத் தவறினால், தொகையைச் செலுத்தும் நாள் வரை நாளொன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் கணக்கிட்டு அபராதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

அடமான பத்திரம்

மேலும் விவசாய அடமான பத்திரத்தை 2 மாதங்களுக்குள் ரத்து செய்ய வேண்டும்; தவறினால் அதற்குத் தனியாக நாளொன்றுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, பாக்கியலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்காக 1 லட்சம் ரூபாயும், வழக்குச் செலவுக்காக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த காலத்திற்குள் இந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயைத் தராவிட்டால், 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கியின் மெத்தனப் போக்கிற்கு வழங்கப்பட்ட இந்த 13 லட்ச ரூபாய் இழப்பீடு மற்ற நிதி நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+