கோவை பாஜக குசும்பு! அண்ணாமலை விடுதலைக்கான போராட்டம் என்ற பெயரில் என்ன கோஷம் போட்டாங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் கோவை பாஜகவினர் எழுப்பிய முழக்கங்கள் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் நடிகைகள் குஷ்பூ,காயத்ரி ரகுராம், கவுதமி, நமிதா ஆகியோரை மிகவும் கேவலமாக பேசிய திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக பெண் தலைவர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை.

ஆனால் இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதில் பேசிய அண்ணாமலை திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக பெண்களை தவறாக பேசிய திமுக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார். மேலும் இனிமேல் திமுகவை சேர்ந்த எவரும் பெண்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

 சென்னையில் அண்ணாமலை கைது

சென்னையில் அண்ணாமலை கைது

இந்தப் போராட்டம் போலீசாரின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் சில மாவட்டங்களில் ஆங்காங்கே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்படித்தான் கோவை காந்திபுரத்திலும் பாஜகவினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 கோவை பாஜக போராட்டம்

கோவை பாஜக போராட்டம்

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை நகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. இதனால் சுமார் அரை மணி நேரம் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பாஜகவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் சாலை மறியல் ஈடுபட்ட மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட சுமார் 50பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

கோவை பாஜகவின் போராட்டம் என கோஷம்

கோவை பாஜகவின் போராட்டம் என கோஷம்

இதனிடையே கோவை பாஜக ஆர்ப்பாட்டம், சாலை மறியலின் போது எழுப்பப்பட்ட கோஷங்கள் அந்த கட்சியில் சலசலப்பை எழுப்பி இருக்கிறது. இது போராட்டம்! போராட்டம்! கோவை பாஜகவின் போராட்டம்! கோவை பாஜகவின் போராட்டம்! என மீண்டும் மீண்டும் பெண்கள் உரத்து முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கம்தான் இப்போது பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பந்த் விவகாரத்தில் பஞ்சாயத்து

பந்த் விவகாரத்தில் பஞ்சாயத்து

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து கடந்த 31-ந் தேதி பந்த் போராட்டத்துக்கு கோவை பாஜக அழைப்பு விடுத்தது. பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர். ஆனால் நீதிமன்றத்திலோ, மாநில தலைமையை கலந்து ஆலோசிக்காமலேயே கோவை மாவட்ட பாஜக தன்னிச்சையாக இப்போராட்டத்தை அறிவித்தது என கழற்றிவிட்டார் அண்ணாமலை. இதனால் கோவை பாஜக கடும் அதிருப்தி அடைந்தது. பின்னர் பந்த் போராட்டத்தையும் கைவிட்டது.

 அண்ணாமலையை புறக்கணிக்கும் இருவர் அணி?

அண்ணாமலையை புறக்கணிக்கும் இருவர் அணி?

இதனால் பாஜகவில் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் தனி ஆவர்த்தனம் வாசிக்கின்றனரா? என்ற கேள்வி எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கோவைக்கு சென்ற அண்ணாமலையின் நிகழ்ச்சியில் சிபிஆரும் வானதி சீனிவாசனும் பங்கேற்கவில்லை. கோவை ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பஜனை பாடிய போதும் இவர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது கோவை பாஜகவின் போராட்டம் என தனித்து அக்கட்சியினர் முழக்கம் எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+