கோவை குண்டுவெடிப்பு தினம்.. ஆர்.எஸ்.புரம் வழியா நாளை போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம்
கோவை: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை (பிப்ரவரி 14) முன்னிட்டு, ஆர்.எஸ். புரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் (பொது வாகனங்கள்) செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரில் இன்று முதல் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் [Coimbatore Bomb Blast].
கோவையில் மறக்க முடியாத சம்பம் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் தான். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 58 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் கோவையில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் வருகிற நாளை (பிப்ரவரி 14) நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிப்ரவரி 14 நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1) வெங்கடசாமி ரோடு, பொன்னுரங்கம் ரோடுகளில் நாளை வாகன பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
2) பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சிந்தாமணி சந்திப்பு, பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
3) புரூக்பாண்ட் சாலையிலிருந்து, சிந்தாமணி ரவுண்டானாவிலிருந்து டி.பி. ரோடு, ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
4) சிந்தாமணியில் இருந்து காந்திபார்க்குக்கு செல்லும் வாகனங்கள் பெரியசாமி ரோடு வழியாக தடாகம் ரோடு அடைந்து செல்ல வேண்டும்.
5) காந்திபார்க் ரவுண்டானாவிலிருந்து டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் வரும் வாகனங்கள் மெக்ரிக்கர் ரோடு வந்து பூமார்க்கெட் வழியாக மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
6) லாலிரோடு ரவுண்டானாவிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரும் அனைத்து வாகனங்களும் மேற்கு சம்பந்தம் ரோடு. டி.பி. ரோடு, கிழக்கு சம்பந்தம் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
7) ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, டி.வி.சாமி ரோடு கிழக்கு மற்றும் மேற்கு. கௌலிபுரவுன் சாலைகளில் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த தடை
8) நாளை ஆர்.எஸ்.புரம் மற்றும் கௌலிபுரவுன் ரோடு, மருதமலை ரோடுகளில் கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications