பல்டி, பல்டியோ பல்டி.. அக்.31 கோவை பந்த் கைவிடப்படுகிறது.. மாவட்ட பாஜக தலைவர் திடீர் அறிவிப்பு!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து நாளை மறுநாள் அக்டோபர் 31-ந் தேதி நடத்தப்படுவதாக அறிவித்திருந்த கோவை பந்த் போராட்டம் கைவிடப்படுவதாக அம்மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி தெரிவித்தார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து வரும் 31-ந் தேதி பந்த் போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்தது. கோவையில் பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
அதேநேரத்தில் இந்தப் போராட்டத்துக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த பந்த் போராட்டத்தை கடுமையாக விமர்சித்தனர்.

சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்ணாமலை தரப்பு பல்டி
இவ்வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் அண்ணாமலை தரப்பு தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்ட பாஜக நிர்வாகம் தன்னிச்சையாக பந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில் தலைமையுடன் ஆலோசனை நடத்தவில்லை என தெரிவித்திருந்தது. மேலும் மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறைக்கு அட்வைஸ்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்ரவர்த்தி, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜகவினர் அவர்களது விருப்பப்படி ஒரு முடிவு செய்துள்ளனர். அதில் நாங்கள் தலையிட முடியாது. பந்த் போராட்டம் நடத்துவது தொடர்பாக கோவை மாவட்ட பாஜகதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பாஜக திடீர் வாபஸ்
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கோவையில் பந்த் நடத்தப்பட்டால் தொழில்துறை பாதிக்கும் என தொழிலதிபர்கள், எமது மாநில தலைவர் அண்ணாமலையிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் அறிவுறுத்தலில் அக்டோபர் 31-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பந்த் போராட்டம் கைவிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications