கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..சூத்திரதாரி யார் உண்மை வெளிவருமா?
கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று கார் வெடித்த நிலையில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை மேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. கார் வெடிப்பின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐஏ விசாரணையின் முடிவில் கார் வெடிப்பிற்கான உண்மையான காரணம் என்ன? சதி வேலைக்கான சூத்திரதாரி யார் என்ற தகவல் வெளியே வரும். கோவை மாநகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications