‛தேங்க்ஸ் அங்கிள்’.. மழலை மொழியில் போலீசுக்கு ரம்ஜான் வாழ்த்து.. கோவையில் நெகிழவைத்த குழந்தைகள்
கோவை: நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினர். இந்த வேளையில் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைக்கொடுத்து தேங்க்ஸ் மற்றும் ரம்ஜான் வாழ்த்து கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப்படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இத்தகைய நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
சூரிய உதயத்திற்கு முன் மட்டும் உணவு சாப்பிடுகிறார்கள். இதனை சஹர் என்பவர்கள். அதன்பிறகு முழுநாளும் நோன்பு உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு மார்ச் 24ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் வெளியிட்டார்.
இதையடுத்து முறைப்படி இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றனர். இதையடுத்து ரம்ஜான் பிறை தென்பட்டததை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று காலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சிறப்பு தொழுகைகள் முடிந்த பிறகு அனைவரும் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர். சென்னை மண்ணடியில் உள்ள பள்ளியில் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் நோன்பு பெருநாள் உரை நடைபெற்றது. எம்எல்ஏவான ஜவஹிருல்லா நோன்பு பெருநாள் உரை ஆற்றினார்.
திருவண்ணாமலை ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதில் சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ஜாமியா பள்ளிவாசலில் உலக மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், கொரொனா பரவல் நாட்டை விட்டு முற்றிலும் விலக வேண்டி தொழுகை நடத்தப்பட்டது.
அதேபோல் கோவையிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது சிறப்பு தொழுகையை முடித்த குழந்தைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைக்குலுக்கி, பாதுகாப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, ரம்ஜான் வாழ்த்துகளையும் மழலை மொழியில் பகிர்ந்து கொண்டனர். பதிலுக்கு போலீசாரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications