கோழி, ஆட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி? கோவை கலெக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். கோழி, ஆட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி என்பதையும் கலெக்டர் பவன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு ஏராளமான வாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. சுயதொழில் தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஏராளமான தொழில்களுக்கு அரசு இலவசமாக பயிற்சி அளிக்கிறது. அதேபோல் சுயதொழில் தெரிந்தவர்களுக்கு கடன் உதவி மற்றும் மானியம் அளிக்கிறது.

Coimbatore loan Collector

இதுபற்றி கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: "தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கி விடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021 - 22 -ம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது.

புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை, பன்றி பண்ணை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும்.

இதுதவிர வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnlda.tn.gov.in என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களை அருகில் உள்ள கால்நடை டாக்டர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+