மேற்குத் தொடர்ச்சி மலையே இருக்காது.. எச்சரித்த நீதிமன்றம்.. ஆக்ஷனில் இறங்கிய கோவை கலெக்டர்
கோவை: கோவை மாவட்டத்தில், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்ட விரோத மண் எடுக்கும் பணிகளை தடுக்காவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, பேரூர் வட்டம், ஆலந்துறை, காளிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக மண் எடுத்த இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தின் அழகே மேற்கு தொடர்ச்சி மலைதான். இந்நிலையில், மலையின் அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கரை, ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர் புருஷோத்தமன் சட்ட விரோத மண் கடத்தல் குறித்த வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் சதிஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் மண் எடுக்கப்படும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், கலெக்டருக்கு பதிலாக கனிமவளத் துறை உதவி இயக்குநர் அங்கு ஆய்வு செய்ததோடு, ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. பின்னர், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கனிமவள துறை உதவி இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்று கூறி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மண் எடுக்கப்படுவது வீடியோவில் உறுதி ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து அனுமதித்தால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும். அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மண் அள்ளுவதால் ஏற்படும் குழிகளில் வன விலங்குகள் சிக்கும் அபாயமும் உள்ளதால் அரசு, பட்டா நிலங்களில் மண் எடுப்பதை தடுக்க மற்றும் தடை செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். இந்த செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும், மணல் எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பேரூர், தடாகம் பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பேரூர் வட்டம், ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு, மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் முறைகேடாக மண் எடுத்த இடங்களில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.
முறைகேடு செய்தவர்கள் மீது உடனடியாக இன்றே FIR பதிவு செய்திடவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், தடை செய்யப்பட்டுள்ள செங்கல் சூளைகளில் உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடை செய்திட சூளைகளை சீல் வைத்திடவும், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications