கோவை வஉசி மைதானத்தில் வரப்போகும் மாற்றம்.. விளையாட்டு வீரர்களின் உச்சி குளிருது
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் சமீபத்தில்தான் செம்மொழி பூங்கா மற்றும் சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பெரியார் நூலகம் உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் திட்டமும் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் கைப்பந்து மற்றும் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை வஉசி மைதானத்தில் அற்புதமான மாற்றத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை விளையாட்டு
விளையாட்டு துறையிலும் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. தடகளம், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசியளவிலும், சர்வதேசளவிலும் தடம் பதித்து கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். தற்போது அதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும்விதமாக, ஆர்எஸ் புரம் பகுதியில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், ரூ.9 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். அதே ஆர்எஸ்புரம் பகுதியில் செயற்கை புல்வெளி மைதானம் (டர்ஃப்) அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல கவுண்டம்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மைதானமும் கட்டப்பட்டு வருகிறது.
வஉசி மைதானத்தில் மாற்றம்
கோவை வஉசி மைதானத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் அதை பராமரித்து வருகிறது. அங்கு கால்பந்து மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கைப்பந்து, பேட்மின்டன், கபடி உள்ளிட்ட போட்டிகள் வெளிப்புற மைதானத்தில் நடந்து வருகிறது. அந்த நிலத்தையும் கோவை மாநகராட்சி நிர்வாகம் தான் பராமரித்து கொண்டிருக்கிறது.
மாறி வரும் பருவநிலை, சமதன்மையற்ற நிலப்பரப்பு ஆகியவற்றால் அங்கு விளையாடுவது பயிற்சி மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டில் பலர் தடம் பதித்து வருகிறார்கள். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அதிரடி மாற்றத்தில் இறங்கியுள்ளது.
உள்புற கைப்பந்து மைதானம்
வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள வெளிப்புற மைதானத்தை, உள்புற மைதானமாக மாற்றும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.1.95 கோடி மதிப்பில் உள்புற கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 2 கோர்ட்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. ரூ.75 லட்சம் மதிப்பில் மைதானம் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பில் மேல்தளம், இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்து மைதானத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications