பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு பண்ணனுமா.. இதை நோட் பண்ணுங்க.. கலக்கும் கோவை
கோவை: 90களில் பிறந்த பெரும்பாலானோருக்கு பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாமலேயே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பிறப்புச் சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான சேவைகள் அனைத்திற்கும் பிறப்புச் சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தப்படவுள்ளது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல், அரசுப் பணிகளுக்கான நியமனம், ஓட்டுநர் உரிமம் ஆகிய சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் ஆவணமாகப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகத் தேவைப்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்தம் சட்டம் 2003 மூலம் இச்சட்டம் அமலுக்கு வருகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் ஆவணமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது இச்சட்டம் அமலுக்கு வருகிறது.
பொதுவாக 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்படாமலயே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு, முக்கிய ஆவணங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் என்பது மிகவும் அவசியமானதாகும். இந்நிலையில், 2000 ஆம் வருடத்திற்கு முன்பு பிறந்த குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச் சட்டம் 2000 விதிகளின்படி, 2000 ஆம் வருடத்திற்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் குழந்தையின் பெயரை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பதிவு செய்யத் தவறினால் 2000-ம் வருடத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைகளின் பெயரை நிரந்தரமாகப் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே மாநில அரசாங்கத்தால் 25 ஆண்டுகள் கால அவசாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2017-ம் ஆண்டு வரைக்கும் பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்புச் சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்றும், 2017-க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம், சார்ந்த வார்டு அலுவலகங்களுக்கு சென்றும், குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணத்துடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தும் குழந்தைப் பெயருடனான பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
பள்ளியின் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், போனஃபைடு சான்றிதழ் உள்ளிட்ட பிறந்த தேதி பதிவிட்டிருக்கும் முக்கிய ஆவணங்களுடன் சென்று பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், நடப்பாண்டில் பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வருடத்துக்குள் பிறப்புச் சான்றிதழ் பெயரைப் பதிவு செய்வதன் மூலமாக காலதாமத பதிவுக் கட்டணத்தை தவிர்க்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications