கோவையில் 5 தொகுதிகளில் சாதகமாக வந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. செந்தில் பாலாஜியால் உற்சாகமான ஸ்டாலின்!
கோவை: கோவை மாவட்டத்தில் இம்முறை அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது வந்துள்ள உளவுத்துறை ரிப்போர்ட் திமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கோவையின் இரு முக்கியமான தொகுதிகளில் திமுகவின் வெற்றி உறுதி என்றும், 3 தொகுதிகளில் திமுக கடும் போட்டி அளிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் வெறும் 24 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. குறிப்பாக கோவையில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால் ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கியே திமுக கொங்கு மண்டலத்தில் பிரத்யேக கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர், செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பெரியார் நூலகம், சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. அதேபோல் சமூக ரீதியிலான கணக்குகளையும் திமுக இம்முறை சரி செய்திருக்கிறது.
அதேபோல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் கோவை மாவட்டத்தை கொடுத்திருப்பதால், திமுகவினர் இன்னும் உற்சாகமாகி இருக்கின்றனர். இதனிடையே கோவையில் முதல் ஆளாக சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைத்து திமுக பணிகளை தொடங்கி இருக்கிறது. இதற்கு பின்னணியில் திமுக கைகளுக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட் என்று சொல்லப்படுகிறது.
அதாவது உளவுத்துறை மூலமாக கிடைத்த ரிப்போர்ட் அடிப்படையில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரு தொகுதிகளும் திமுக வசம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கிடவு ஆகிய தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே திமுகவின் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்குள் இன்னும் சில தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்று கணக்கிட்டு பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் விஜய் பிரிக்கும் வாக்குகளும் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் சாதகமாக அமையும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications