கோவையில் பரிதாபம்.. பக்கவாதத்தால் மனைவி மரணம்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர்!
கோவை: கோயம்புத்தூரில் மனைவி உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. வயது 74. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சரோஜினி. வயது 72. இவர் கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சரோஜினி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை இவரது மகள் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், சரோஜினி நேற்று உயிரிழந்தார். இதையறிந்த கணவர் மணி துக்கம் தாங்காமல் அழுதுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணி, சரோஜினி தம்பதிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. வாழ்விலும் ஒன்றிணைந்து இருந்து, சாவிலும் இந்த தம்பதிகள் இணைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications