Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 60 வீடு இருக்கு.. ஏக்கர் கணக்கில் பொய்.. டாக்டருக்கு விபூதி அடித்த கோவை காதல் மன்னன்

Subscribe to Oneindia Tamil

கோவை: காலேஜ் வேணுமா காலேஜ் இருக்கு, பள்ளிக்கூடம் வேணுமா பள்ளிக்கூடம் இருக்கு, சென்னையில் 60 வீடு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு, பெங்களூரில் பங்களா இருக்கு.. எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது, திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறி டாக்டர் உள்பட 3 பெண்களிடம் சுமார் 80 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் பலர் பெண் கிடைக்காமல் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆனால அதே கோவையில் 42 வயதான ஒரு 80ஸ் கிட்ஸ் பெண்களை ஏமாற்றி பணம் நகையை பறித்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Coimbatore Kadhal Mannan arrested for tricking women including doctor by pretending to marry him

கோவை மாவட்டம் பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த 42 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். ரவிச்சந்திரனை கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்துவிட்டார். 2 பேரும் முறைப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டனர். இதனால் ரவிச்சந்திரன் 2-வது திருமணம் செய்ய பெண் தேட தொடங்கினார்,

இதற்காக ரவிச்சந்திரன் திருமண இணைய தளங்களில் தனது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், மாப்பிள்ளை தேவை என்று விதவை பெண் யாராவது பதிவு செய்து உள்ளார்களா? என்று தீவிரமாக தேடியுள்ளார்.

அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வரன் தேவை என்று மேட்ரிமோனி தளத்தில் கூறியுள்ளார். இதை பார்த்த ரவிச்சந்திரன், உடனே அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தான் பெரிய வியாபாரி என்று அறிமுகம் செய்துள்ளார். தனக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூரில் பங்களா இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தற்போது னக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று, தன்னை மணக்க விரும்பிய பெண்ணிடம் அள்ளிவிட்டுள்ளார். அதை நம்பிய அந்த பெண், திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துவிட்டார்.

அதன்பிறகு அந்த பெண்ணும் ரவிச்சந்திரனும் அடிக்கடி செல்போனில பேசி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் நைஸாக வேண்டிய பிட்டை போட்டிருக்கிறார். தனக்கு திருமண தோஷம் இருப்பதால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று தூண்டில் போட்டுள்ளார்.

அதை நம்பிய அந்த பெண், ரவிச்சந்திரனுக்கு ரூ.80 லட்சம் ரொக்க பணம், ரூ.80 லட்சம் மதிப்பிலான 167 பவுன் நகையையும் கொடுத்து உதவி உள்ளார். நகை, பணத்தை கொடுத்த பிறகு அந்த பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகி உள்ளது.

இதுகுறித்து அந்த பெண் பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ரவிச்சந்திரனை பிடிக்க போலீசார் தீவிரமாக முயன்றனர். = அவர், கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

அப்போது அவருடன் பெண்ணும் இருந்தார். இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோவைக்கு அழைத்து வந்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரவிச்சந்திரன், தனது மனைவியை பிரிந்து 2-வது திருமணம் செய்ய பெண் தேடி உள்ளார். அப்போது அவருடைய வலையில் நாமக்கல்லை சேர்ந்த பெண் விழுந்தார். அவரிடம் பணம் நகையை அபேஸ் செய்தார்.

இதேபோல் கரூர் பகுதியில் இருந்த போது கணவரை இழந்த பல் டாக்டரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி பழகி உள்ளார். அதை நம்பிய பெண் டாக்டரும் நெருங்கி பழகி உள்ளார். பெண் டாக்டரும் ரவிச்சந்திரனும் ஒரு கட்டத்தில் கணவன்- மனைவி போல் வாழ்ந்து உள்ளார்கள்.

மேலும் ரவிச்சந்திரன், பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பெற்று அதில் 2 சொகுசு கார்கள் வாங்கி உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார். பல இடங்கிளில் சுற்றி கைவரிசை காட்டியவரை கரூரில் வைத்து பிடித்துள்ளனர் போலீசார். தற்போது போலீசார் ரவிச்சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே திருமண ஆசை காட்டி ஒருபெண்ணை ஏமாற்றியதாக பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது. காதல் மன்னன் ரவிச்சந்திரனை காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+