தள்ளுவண்டி கடை லாவண்யா நினைவிருக்கா? கோவையில் படுக்கையிலுள்ள கணவனை? இப்படியும் பெண்கள் இருக்காங்களா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கள்ளக்காதலனுக்காக, கணவனை கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறதென்றால், நோயாளி கணவனை கொலை செய்யும் அளவுக்கு பெண்கள் துணிவது அதற்குமேல் பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. தற்போது ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களும் கைதாகி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் லாவண்யா என்ற பெண் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.. லாவண்யாவின் கணவர் பெயர் பிரபு..

Coimbatore kovai tiffin center

இவர் நீண்ட காலமாகவே உடல்நலம் குன்றி படுக்கையில் இருந்துவந்துள்ளார்.. எனவே, தன்னுடைய மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்திருக்கிறார் லாவண்யா.

அப்போது, தள்ளுவண்டி கடைக்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.. ஒருகட்டத்தில் கடையின் ரெகுலர் கஸ்டமராகிவிட்டதால், அவருடன் நட்பாக பேசி வந்த லாவண்யா, இறுதியில் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளார்.. இந்த விஷயம் பிரபுவுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார்.

சாப்பாட்டில் விஷம்

எனவே ஆத்திரம் அடைந்த லாவண்யா, பிரபுவுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து தந்தார். அதனை சாப்பிட்ட பிரபுக்கு உடல் நலம் குன்றியுள்ளது.. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், பிரபுவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தந்தனர்.. இது லாவண்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை தந்தது.. விஷம் வைத்தும் கணவர் சாகவில்லையே என்று ஆத்திரப்பட்ட லாவண்யா, கணவனின் கழுத்தை டவலால் இறுக்கியே கொன்றுவிட்டார்.

கணவர் தன்னைவிட்டு பிரிந்துபோய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்து லாவண்யா அழ ஆரம்பித்தார்.. மீண்டும் மருத்துவமனையில் பிரபுவை சேர்த்தனர்.. ஆனால், உயிர் போய்விட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.. இதனால் போலீசார், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அந்த ரிப்போர்ட்டில்தான் கழுத்து நரம்புகள் முறிபட்டு உயிர் போயிருப்பது உறுதியானது.. இறுதியில் லாவண்யா கள்ளக்காதலனுடன் சிக்கியிருந்தது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நோயாளி கணவன்

இதேபோன்ற சம்பவம் நாக்பூர் மாவட்டத்திலும் நடந்துள்ளது.. தருடி குர்த் என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேன்.. இவருக்கு 38 வயதாகிறது.. மனைவி பெயர் திஷா..
இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன.. 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்..

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் படுக்கையிலேயே இருந்துள்ளார் சந்திரசேன். கை, கால் செயல்பட முடியாததால், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை.. எனவே, பாத்ரூம் அழைத்து செல்வதானாலும், மனைவி திஷா உதவித்தான் அவருக்கு தேவைப்படும்..

கள்ளக்காதல் கொடுமை

இதனிடையே, ஆசிஃப் என்ற நபருடன் திஷாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது..

இந்நிலையில், சந்திரசேன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு நிஷா திடீரென போன் செய்து கூறினார்.. இது உறவினர்களுக்கு சந்தேகத்தை தந்த நிலையில், போலீசிலும் புகார் தந்தனர்.. எனவே, சந்தேக மரணம் என வழக்கை பதிவு செய்த போலீசார், சந்திரசேன் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

அப்போதுதான், அவரது கழுத்து நெரிபட்டு , கொலை செய்யப்பட்டது உறுதியானது..
இதற்கு பிறகு திஷாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான், கள்ளக்காதலனுக்காக, கணவரை கொன்றதை திஷா ஒப்புக் கொண்டார்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

இதுபோல, தங்களது தகாத உறவுக்காக, மனைவிமார்களை, கொலை செய்யும் கணவன்களும், கணவன்மார்களை கொலை செய்யும் மனைவிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்கள் மட்டும் நம்மிடையே இல்லாவிட்டால், ஏராளமான குற்றவாளிகள் தப்பியிருக்கக்கூடும்..

பறிபோன அப்பாவி உயிர்களுக்கு, கொஞ்சமாவது நியாயம் கிடைத்து வருகிறது என்றால், இதுபோன்ற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்களினால்தான்.. ஆகமொத்தம், தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால், எந்த குடும்பமும் தன்னுடைய நிம்மதியை இழந்துவிடும் போல..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+