Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் "வேலி" தாண்டிடுச்சு வெள்ளாடு.. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் யாரந்த 18 வயது பொண்ணு.. அச்சோ

Subscribe to Oneindia Tamil

கோவை: யாரிந்த 18 வயது அப்பாவி பெண் என்று தெரியவில்லை.. ஒருவழியாக காமுகர் கூட்டத்திலிருந்து எகிறி தப்பி போலீஸிடம் வந்துள்ளார்.. என்ன நடந்தது மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில்?
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 18 வயதாகிறது.. சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவரது பக்கத்து ஊரை சேர்ந்தவரையே, குடும்பத்தினர் பார்த்துபேசி, கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்கள்.

திருமணம்: ஆனால், கடந்த ஒரு மாதமாகவே இந்த பெண்ணை காணவில்லையாம்.. இதனால், அதிர்ந்துபோன அவரது பெற்றோரும், சொந்தக்காரர்களும், பெண்ணை தேட ஆரம்பித்தனர்.. எங்கெங்கோ அலைந்து பார்த்தும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், தேடுதல் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை..

Coimbatore Mettupalayam incident and Why did 18 year old girl leave her husband

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், அந்த இளம்பெண் நின்றிருப்பதை, அவரது சொந்தக்காரர் ஒருவர் பார்த்துள்ளார்.. பிறகு, அவரது வீட்டிற்கும் இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.. மகளை பார்த்ததுமே, பெற்றோர், ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.. இத்தனை நாளா எங்கே போனாய்? என்று கேட்டிருக்கிறார்கள்.

பலாத்காரம்: அதற்கு அந்த பெண், பல நபர்கள் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக சொன்னார்.. இதைக்கேட்டதும் குடும்பத்தினருக்கு தூக்கிவாரிப்போட்டது. பிறகு, உடனடியாக மேட்டுப்பாளையம் மகளிர் போலீசுக்கு சென்று புகார் தந்தார்கள். அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கை விசாரிக்க துவங்கினர். அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

அதாவது, இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கல்யாணம் ஆன ஒருசில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.. இதனால் தம்பதிக்குள் தகராறும் நிறைய வந்துள்ளது.. தினம் தினம் சண்டை வந்துவிடவும், நொந்துபோன அந்த இளம்பெண், கணவரை பிரிந்து அந்த பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து வசிக்க துவங்கியுள்ளார்.

மேட்டுப்பாளையம்: அந்த நேரம்பார்த்து, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவர் இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.. அப்போது அவர், "இப்படி தனியாக வந்து வீடு எடுத்து தங்கக்கூடாது.. தனியாக நீ இருக்கவும் வேண்டாம். என்னுடன் வேண்டுமானால் வந்து விடு" என்று சொன்னாராம்.. உடனே இந்த பெண்ணும், சரி என்று சொல்லி அவரை நம்பி சென்றிருக்கிறார்.

இளம்பெண்ணை அழைத்து சென்ற சிவனேஷ்பாபு, மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில், ஒரு வீடு பார்த்து அவரை குடிவைத்திருக்கிறார்.. பிறகு, வெளியில் சென்றுவருவதாக சொல்லிவிட்டு போனாராம்.. வெளியே போகும்போது, வீட்டின் வெளிப்புற கதவையும் பூட்டிவிட்டு போனாராம்.. இதைப்பார்த்ததும், இந்த பெண்ணுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால், கொஞ்சநேரத்திலேயே சிவனேஷ்பாபு, ஒரு நண்பருடன் வீட்டிற்குள் வந்தாராம்.

புதிய நண்பர்: தன்னுடைய நண்பர் பெயர் ராகுல், மெக்கானிக்காக வேலைபார்க்கிறார் என்று, இளம்பெண்ணுக்கு அந்த நண்பரை அறிமுகம் செய்து வைத்தாராம். பிறகு 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம்..

அப்போது திடீரென 2 பேருமே, பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.. இதனால், அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சலிட முயன்றுள்ளார். ஆனாலும், அவரை சரமாரியாக தாக்கி, இருவரும் வலுக்கட்டாயமாக நாசம் செய்துள்ளனர்.. இந்த கொடுமை தினமும் நடந்துள்ளது.. பலமுறை 2 பேரும், இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்களாம்.

அதுமட்டுமல்ல, ஊரை சுற்றிப்பார்க்கலாம் என்று சொல்லி, நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அந்த இடங்களில் எல்லாம், தாங்கள் சொல்லும் நபர்களுடன், உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும் பெண் மறுப்பு சொல்லவும், மிருகத்தனமாக அவரை தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

உல்லாசம்: இறுதியில், அந்த பெண்ணிடம், பல பேரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. இப்படியே ஒரு மாத காலம், பலபேருக்கு அந்த பெண்ணை பல பேருக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள்.. நாளுக்கு நாள் அவர்களது டார்ச்சர் அதிகமாகி விட்டதால், அங்கிருந்து படாதபாடு பட்டு தப்பித்து வந்துவிட்டாராம்.

இவ்வளவும் போலீசாரின் வாக்குமூலத்தில் இளம்பெண் சொல்லியதையடுத்து, சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் மீது போலீசார் வழக்கு பரிதவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் இவர்கள் 2 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டதால், அவர்களை தேடும் பணி ஆரம்பமானது.

மேட்டுப்பாளையம்: இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் ஒளிந்துகொண்டிருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், சிவனேஷ் பாபு இன்னமும் கிடைக்கவில்லை.. அவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன், சிவனேஷ் பாபு அழைத்து வந்த அந்த நபர்கள் எல்லாம் யார் என்ற லிஸ்ட்டையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.

பாதுகாப்பு இல்லாமல் ஒருபெண் தனியாக வாழ்வது சிக்கல் என்றாலும், தாலி கட்டின கணவனையும், பெற்ற தாய் தகப்பனையும் நம்பாமல், வேறு யாரையோ நம்பி சென்று, இன்று கண்ணீர் வடித்து நிற்கிறார் இந்த 18 வயது பரிதாப பெண்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+