காதலனின் அண்ணன் குற்றவாளி.. மேட்டுப்பாளையம் ஆவண கொலை வழக்கில் கோவை கோர்ட் தீர்ப்பு! 27ம் தேதி தண்டனை
கோவை: தமிழகத்தையே உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவ கொலை வழக்கில் வினோத் குமார் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது... இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரம் வரும் 29ம் தேதி அறிவிக்கப்படும் என கோவை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் நடந்த மேட்டுப்பாளையம் கவுரக்கொலை, தமிழகத்தில் பல்வேறு அதிர்வலைகளை உண்டுபண்ணியிருந்தது.. வேறு வேறு சாதி என்பதால், மிக கொடூரமாக இந்த கொலைகள் அன்று நடத்தப்பட்டன. அன்று என்ன நடந்தது? இந்த வழக்கின் பின்னணி என்ன?

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி 45 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.. இவருடைய மனைவி பெயர் பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேருமே, பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஆவர்.
இதில் கனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுடைய காதல் 2 வீட்டுக்கும் தெரியவந்தது. இதில், கனகராஜின் வீட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.. அவரது அப்பா கருப்பசாமியும், மற்ற சகோதரர்களும் இந்த காதலை ஏற்க மறுத்தனர்.
கனகராஜ்: இதனிடையே, பெண்ணின் வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அந்த பெண், கனகராஜை திருமணம் செய்து கொள்வதற்காகவீட்டைவிட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்தார்.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த கனகராஜின் சகோதரர்கள், இளம்பெண்ணை பார்த்ததுமே மேலும் ஆவேசமானார்கள்.. இதனால், அந்த இளம்பெண் திரும்பி சென்றுவிட்டார்.
எனினும், தன்வீட்டில் இருக்க முடியாத நிலையில், மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்தார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மனம்மாறிய அப்பா கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், காதலியை வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச்சினை தீர்ந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாகவும் சொன்னார்..
வாடகை வீடு: இதைக்கேட்டு மகிழ்ச்சியைடந்த கனகராஜ், உடனே காதலியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இது கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மறுநாளே அதாவது
2019ம் ஆண்டு ஜூன் 28 தேதி, கனகராஜின் வீட்டுக்கு சென்றார். சென்ற வினோத், அந்த பெண்ணை திருப்பி அனுப்புமாறு தகராறு செய்தார். இதனால், அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஆவேசம்: இதில் ஆத்திரம் அடைந்த வினோத், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு அந்த பெண் ஓடிவந்து, தடுக்க முயன்றார். ஆனால், அப்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார் வினோத்.. அப்போதும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்து துடிதுடித்து இறந்துவிட்டார். அந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..
வேறு வேறு சாதி என்பதால், சொந்த தம்பியையும், பெண்ணையும் அரிவாளால் வெட்டி சாய்த் கொலைவெறி நபர் வினோத்தை போலீசார் கைது செய்தனர்.. அத்துடன், அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணை: தமிழ்நாடு முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.. இந்த வழக்கு, கோவை எஸ்சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ய தூண்டியதாக கைது செய்யப்பட்ட கந்தவேல் , சின்னராஜ், அய்யப்பன் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்காததால், 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதே போல வினோத்குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. ஆணவ கொலை செய்யப்பட்டதால் வரும் 29ம் தேதி வினோத் குமார்க்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் பா. மோகன் தெரிவித்துள்ளார். அதே போல குற்றவாளிக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என இளம்பெண்ணின் தாயார் கூறியிருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications