கோவையில் கை,கால் கட்டப்பட்டு மூதாட்டி கொலை! நேபாள பணிப்பெண் எங்கே? விரைந்த தனிப்படை
கோவை: கோயமுத்தூரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் இருந்த நேபாள பணிப்பெண், அவரது கணவர் மாயமான நிலையில் அவர்களை பிடிக்க மகாராஷ்டிராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவை சேர்ந்த ராம்குமார் குட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ராம்குமார் குட்டி ஆயுர்வேத மருத்துவராக இருந்து வருகிறார்.

இவர்களது ராம்குமாரின் 82 வயதான தாய் கஸ்தூரி குட்டியும் வசித்து வந்தார். ராம்குமார் தனது குடும்பத்தினருடன் வியட்நாம் நாட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் கஸ்தூரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்நத சுர்ஜா என்பவர் 4 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் வியத்நாமில் இருந்து தினந்தோறும் தனது தாய் கஸ்தூரிக்கு போன் செய்து பேசுவது வழக்கம்.
அது போல் நேற்றைய தினம் அவர் தாய்க்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமார், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் போட்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவர்கள் போய் பார்த்த போது கஸ்தூரி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர்.
கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறை விசாரணையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்த கைரேகைகளை சேகரித்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வீட்டின் பின்னால் தூக்கி வீசப்பட்டிருந்த கஸ்தூரியின் செல்போனை போலீஸார் மீட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொலை நடந்துள்ள நிலையில் வீட்டு பணிப்பெண் சுர்ஜா ரோக்யாவும் அவரது கணவரும் காணவில்லை. இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுர்ஜாவும், அவரது கணவரும் நேபாள நாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் தனிப்படையினர் சென்னை, மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிப்பெண்ணின் புகைப்படத்தை காட்டி மாவட்ட எல்லைகளிலும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications