Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவைக்கு இனி பொற்காலம்தான்.. சிட்கோ சாலை – மதுக்கரை சாலையில் சூப்பர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. புதிது புதிதாக பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை போல பொள்ளாச்சி சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிட்கோ சாலை - மதுக்கரை சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வளர்ச்சி நிலையில் கோவை மாவட்டம் உள்ளது. தொழில் நகரமான கோவையில் பஞ்சாலைகள், மோட்டார் பம்ப், கிரைண்டர் உற்பத்தி மற்றும் ஏராளமான குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

coimbatore bridge

ஐடி துறையிலும் கோவை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள எல்காட் ஐடி பார்க்கை வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ளார். இதுதவிர ஏராளமான தனியார் ஐடி பார்க்குகளும் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரம், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

அவிநாசி சாலை, சாய்பாபாகாலனி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, கலைஞர் நூலகம் உள்ளிட்ட திட்டப் பணிகளும் நடந்து வருகின்றன. இதேபோல புதிது புதிதான மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் நகரம் வேகமாக வளர்வதால், போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

பொள்ளாச்சி சாலையை பொறுத்தவரை ஏராளமான கல்வி நிறுவனங்கள், சிட்கோ ஆகியவை இருப்பதால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்கின்றனர். இந்நிலையில் சிட்கோ சாலை மற்றும் மதுக்கரை சாலையை இணைக்கும் வகையில் ஒரு புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சாலையில் இருந்து சிட்கோ சாலை மற்றும் மதுக்கரை சாலையை 2 கி.மீ தொலைவு இடைவெளி உள்ளது. ஏராளமான மக்கள் பயன்படுத்தினாலும் இந்த சாலைக்கு சரியான இணைப்பு இல்லை. இதன் காரணமாக மக்கள் பொள்ளாச்சி சாலை, சுந்தராபுரம் சிக்னலை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது. எனவே சிட்கோ சாலை - மதுக்கரை சாலையை நேரடியாக இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். இந்த புதிய பாலம் மூலம் மக்கள் சுந்தராபுரம் சிக்னல் வராமல் நேரடியாக பயணிக்கலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நம்புகிறோம்.

மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். ரூ.8 லட்சம் மதிப்பில் 4 மீட்டர் நீளம், 14 மீட்டர் அகலத்தில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. அந்த நடைமுறை நிறைவு பெற்ற பிறகு, பாலம் கட்டும் பணிகள் தொடங்கும் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+