'மாமன்னன் படத்தை பார்த்து திருந்துங்க'.. கோவை கலெக்டருக்கு டிக்கெட் அனுப்பிய பாமக நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்ட மாவட்ட செயலாராக உள்ள அசோக் ஸ்ரீநிதி, கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமாருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட்டை அனுப்பி வைத்து , இந்த படத்தை பார்த்தாவது திருந்துங்க எனறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ளமாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் குறைதீர் முகாம் நடைபெறும். அங்கு சென்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் மனுக்களை அளிக்கலாம். அவர் நடவடிக்கை எடுப்பார். அந்த மாவட்டத்தில் உள்ள எந்த துறை குறித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார்கள் அல்லது குறைகளை தெரிவிக்கலாம். அவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். இதுதான் தமிழகத்தின் உள்ள நடைமுறை.

Coimbatore PMk district secretary Ashok Srinidhi sent Mamannan movie ticket to Coimbatore collector

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமாரை அண்மையில் சென்று சந்தித்து வந்த கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி அதுபற்றி ஒரு பதிவினை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே பார்ப்போம்.

"கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் அவர்களே நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும். வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.

பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.

பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள். நாங்கள் உங்கள் முன் "நின்று பேச வேண்டும்"

உங்களை நாங்கள் அந்நார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களை கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும், உங்களைவிட நாங்கள் (மக்கள்) தாழ்வானவர் போலவும் இருக்கும்.

நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும்?

நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான். மக்களின் பிரச்சினையை தீர்ப்பது உங்கள் கடமை.

மேடையில் இடமிருந்தும், மக்களை ஏன் நிற்கவைக்க வேண்டும்? உங்களின் முன் நாங்கள் உட்கார கூடாதா?

உடனடியாக இதை சரி செய்யவும். இல்லையென்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன். , தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் ( தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளார்) மக்களை தவறாக நடத்த வேண்டாம்" இவ்வாறு தனது பதிவில் அசோக் ஸ்ரீநிதி கூறியுள்ளார். இவரது சமூக வலைதள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+