உல்லாச வாழ்க்கை.. ஆடம்பர செலவு.. டீனேஜ் கொள்ளையர்களால் அதிர்ந்த கோவை
கோவை: ஊர் சுற்ற, ஆடம்பரச் செலவு என உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பைக் திருட்டு, நகைப் பறிப்பு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு கோவை மாநகர போலீஸுக்கு போக்கு காட்டி வந்த கொள்ளையர்களை காவல் துறையினர் பிடித்துள்ளனர். போலீஸார் சுற்றி வளைத்தபோது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற அந்த நபர்கள் விபத்துக்குள்ளானதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக திருட்டு வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதனால், பெண்கள் வெளியே செல்லவும், வாகனங்கள் வெளியே நிறுத்தவும் அச்சத்திற்குள்ளாகும் சூழல் ஏற்பட்டது.

தொடர் புகார்களின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணா சுந்தர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படையினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர்கள் சுற்றித் திரிந்ததும், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் குறித்த தடயங்களை திரட்டினர். பின்னர், தலைமறைவாக இருந்த அந்த இரண்டு இளைஞர்களையும் போலீஸார் பிடிக்க முயன்றபோது போலீஸாரின் பிடியில் இருந்து கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, போலீஸார் அவர்களைத் துரத்திய நிலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில், இளைஞர்கள் இருவருக்கும் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மாவு கட்டுப் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஷபீல் (19), ஷம்சீர் (18) என்ற இந்த இரு இளைஞர்களும் கோவையில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் இரண்டு இடங்களில் வாகனங்களை திருடியுள்ளது தெரியவந்தது.
மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும். அந்தப் பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததும், ஆடம்பர செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சமூக வலைதள பக்கங்களை பார்த்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். திருடிய தங்க நகைகளை உருக்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும் சமயத்தில் அதனை விற்று பணத்தைப் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்துள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications