கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. இனி ஈஸியா போகலாம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகவிட்டன. இருப்பினும் பாலத்தை உரிய திட்டமிடலுடன் கட்டவில்லை என மக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்தில் இரண்டு இறங்கு தளங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.195 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. 100 அடி சாலையில் இருந்து சித்தாப்புதூர் வரையிலும், பார்க் கேட் முதல் டெக்ஸ்டூல் வரையிலு ம் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது.

coimbatore flyover

காந்திபுரம் கோவையின் மையப் பகுதி. அங்கு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்ட பாலம் முறையாக கட்டப்படவில்லை என்று புகார் எழுந்தது. சுமார் 60 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த,ப் பாலத்தை பலரும் சூசைட் பாலம் என்று விமர்சிப்பார்கள். அதில் சிலர் தற்கொலையும் செய்தனர்.

கனரக வாகனங்கள் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. பாலம் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்தாலும், இடையில் எங்கும் இறங்க முடியாத வகையில் வடிவமைத்தனர். இதன் காரணமாக உள்ளூர் மக்களும் பாலத்தை அரிதாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த காந்திபுரம் மேம்பாலத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக, திமுகவினர் புகார் எழுப்பினர். மக்களுக்கு பயனுள்ள வகையில் பாலத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், காந்திபுரம் மேம்பாலத்தில் இரண்டு இறங்கு தளங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 2020 ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு இதற்கு நிர்வாக ரீதியான அனுமதி வழங்கிவிட்டது. முதல்கட்டமாக ரூ.24 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த இறங்கு தளங்களுக்காக பாரதியார் சாலை, 100 சாலை ஆகிய இரண்டு பகுதிகளில் சுமார் 4,000 சதுரடி தனியார் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்க சொல்லி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிவடைந்த பிறகு, இறங்கு தளம் கட்டுவதற்கான கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்புவோம். இரண்டு இறங்கு தளங்கள் கட்டிய பிறகு பாலத்தில் போக்குவரத்து மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

இது கோவை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் சிலர் இதை விமர்சிக்கவும் செய்கின்றனர். இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்காலம். முன்பே முறையாக திட்டமிட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. பாலம் திறக்கப்பட்டதில் இருந்தே, அதில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிகாரிகளும் இப்போது, அப்போது என கூறிவந்தனர். ஆனால் பெரியளவுக்கு முன்னேற்றம் இல்லை. இப்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. மக்களுக்க பயனுள்ள வகையில் இறங்கு தளம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+