கோவையின் அன்புமிக்க ‘சுல்தான் தாத்தா’ காலமானார் - போலீஸார் மரியாதை
கோவை: கோவை மக்களால் டிராஃபிக் தாத்தா, சுல்தான் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த சுல்தான் உடல்நலக் குறைவால் காலமானார். லட்சக்கணக்கான மக்கள் கூடும் டவுன்ஹால் பகுதியில் இரவு பகலென்று பாராமல் காவல் துறையினருக்கு உறுதுணையாக போக்குவரத்தை சரிசெய்து வந்த சுல்தானின் உடலுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர். இவரது மறைவு கோவை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான் தாத்தா
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 87 வயதான முதியவர் சுல்தான். கோவை மக்கள் பலராலும் டிரஃபிக் தாத்தா, சுல்தான் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். கோவையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான டவுன்ஹால், உக்கடம், கரும்புக்கடை பகுதி வழியாக சென்ற எல்லோரும் ஒருமுறையேனும் இவரை கடந்து சென்றிருப்பார்கள். அப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வந்தவர்.

போக்குவரத்து நெரிசல்
சுல்தான் தாத்தா பெரியகடை வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜமாத் மசூதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு தனது வேலை முடிந்ததும் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்தை சரி செய்து வந்தார்.
பொதுநலத்தோடு போக்குவரத்தை சீர்செய்யும் இவருடைய சமூக அக்கறையைப் பார்த்து காவல் துறையினரே சுல்தானுக்கு போக்குவரத்து சரிசெய்வது தொடர்பான பயிற்சியை அளித்தனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் டவுன்ஹாலில் பகுதிகளில் காலை, மாலை என எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இவரது வீடு சற்று தொலைவில் இருப்ரதால் சுல்தான் பெரும்பாலும் மசூதியிலேயே தங்குவது தான் வழக்கம்.
உடல்நலக்குறைவு
அப்போது, தனது பணியை முடித்ததும் இரவு பகல், மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கத் தொடங்கிவிடுவார். வயது முதிர்வால் சமீபகாலமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சையம் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த 10 நாட்களாக கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு கோவை பொது மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் மரியாதை
காவல்துறையினர் நேரடியாக சென்று அவரின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அவரது உடல் துடியலூர் அடக்க ஸ்தலத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. போக்குவரத்துக் காவலர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சுல்தான் தாத்தாவின் மறைவு கோவை மக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications