தோழியின் தாத்தா- அப்பா, பிசிக்ஸ் ஆசிரியர்! மாணவியை சீரழித்த கயவர்கள்! யாரையும் சும்மா விடக்கூடாது!
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டது பின்பு தெரியவந்தது.

உருக்கமான கடிதம்
அந்த மாணவி சின்மயா வித்யாலயா பள்ளியில் இருந்து விலகிய பின்பும் காமக்கொடூர ஆசிரியர் அவரை விடவில்லை என்ற திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. நேற்று இரவு போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

'யாரையும் சும்மா விடக்கூடாது'
'யாரையும் சும்மா விடக்கூடாது' 'ரீதாவின் தாத்தாவையும், எலீசா சாசூவின் அப்பா, இந்த சார் என யாரையும் சும்மா விடக்கூடாது' என தனக்கு கொடுமை இழைத்தவர்களை மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த மாணவி. தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு மாணவிகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் செயல்
இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் முன்பே புகார் கொடுத்தோம். ஆனால் ''பேருந்தில் ஒருவர் இடித்து விட்டு போவதை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அதேபோல ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பள்ளி நிர்வாகம் சொன்னதாக மகளை பறிகொடுத்த தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆசிரியர் கைது மட்டும் போதுமா?
இந்த காமக் கொடூரன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதேபோல் பள்ளியில் பல மாணவிகளுக்கும் அவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் சக மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆசிரியரை கைது செய்தால் மட்டும் போதாது. மாணவியின் தோழிகளின் அப்பா, தாத்தா, மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

மனித மிருகங்களை விடக்கூடாது
ஒரு குழந்தையின் தாய், தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள். ஒரு குழந்தையின் நல்ல எதிர்காலம் போதிக்கும் ஆசிரியர் கையில்தான் உள்ளது. ஆனால் 'வேலியே பயிரை மேய்வது போல்' இப்படிப்பட்ட ஒரு சில ஆசிரியர்களின் செயலால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நபர்களுக்கு பள்ளி நிர்வாகம் எந்த வகையிலும் ஆதரவு கொடுக்க கூடாது என்றும் இவர்களை போன்ற மனித மிருகங்களுக்கு உடனுக்குடன் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications