கல கல வானதி சீனிவாசன்.. கீரை தட்டை கையில் பிடித்து செல்ஃபி.. சேலை அணிந்தபடி பேட்மின்டன்.. கோவையில்
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் பேட்மிட்டன் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவின் தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
கடந்த ஒரு வார காலமாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்றும், திறந்த ஜீப்பில் பயணம் செய்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வானதி சீனிவாசன்
அந்த வகையில் இன்று காலை பந்தய சாலை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி, தொண்டர்களுடன் நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பந்தயச் சாலையில் வாக்கிங் சென்றவர்களுடன் பேசிய வானதி சீனிவாசன் அவர்களிடம் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கீரைக் கட்டு செல்ஃபி
அப்போது முதியவர் ஒருவர் கையில் கீரை கட்டுடன் வானதி சீனிவாசனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார், அப்போது அவரது கையில் இருந்த கீரைகட்டு செல்ஃபி எடுக்க இடையூறாக இருந்தது. இதனால் சற்றும் யோசிக்காமல் கீரைத் தட்டை, வானதி சீனிவாசன் தன் கையில் வாங்கி வைத்துக் கொண்டார்.

பேட்மின்டன் விளையாட்டு
பின்னர் அங்கிருந்த விளையாட்டு திடலில் சிறிது நேரம் பேட்மின்டன் விளையாடிய வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் அப்பகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டுள்ள 100 சதவிகித வாக்குப்பதிவுக்கான கையெழுத்து பதாகையில் வானதி சீனிவாசன் கையொப்பமிட்டார்.

கோவை தெற்கு ஸ்டார் தொகுதி
வானதி சீனிவாசன் ஃபிட்டாக இருப்பதை பேட்மின்டன் விளையாட்டு நிரூபித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இதே தொகுதியில் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார். எனவே இது ஸ்டார் தகுதி அந்தஸ்தை பிடித்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில் அரசியல் அனல் பறக்கிறது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி











Click it and Unblock the Notifications