கோயம்புத்தூரே கலக்குதே.. கோவைவாசிகளுக்கு குட்நியூஸ்.. ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு அதிரடியை பாருங்க
கோவை: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.
சிறப்பு பஸ்கள்: கடந்த வாரம்கூட, சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைத்தன.. அதாவது, 12ம் தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக் கிழமையை 13ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி முடிவு செய்திருந்தனர்.
மேலும், ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காகவே, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பஸ்கள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல, லீவு முடிந்து, சொந்த ஊரிலிருந்து கிளம்பி வருவதற்கும் பஸ்கள் பிரத்யேகமாக விடப்பட்டிருந்தன.
மகளிர் உரிமைத்தொகை: அவ்வளவு ஏன்? கடந்த 3 நாட்களுமே மகளிர் உரிமைத்தொகை முகாம்கள் நடந்ததால், இதற்காகவும் சிறப்பு பஸ்களை தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதோ இப்போதும், ஆவணி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களான நாளை(சனிக்கிழமை), 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மகிழ்ச்சி அறிவிப்பு: கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பஸ்களுடன் கூடுதலாக 60 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications