பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம்
கோவை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம், வியூகங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சார களத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு வியூகத்தை கடைபிடிப்பார்கள். வாக்காளர்களை கவர்வதற்காக நூதன பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். கோவையில் அதிமுக எம்எல்ஏவும், சூலூர் வேட்பாளருமான கந்தசாமி தன்னுடைய சொந்த ஊரில் பிரச்சாரம் செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.பி.கந்தசாமி, திமுக சார்பில் தளபதி முருகேசன் போட்டியிடுகிறார்கள். சூலூர் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி கொண்டிருக்கிறது. அங்கு கந்தசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை அங்கு வெற்றி பெறுவதற்கு அவர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

தேர்தல் பிரசாரம்
கந்தசாமி இன்று தன்னுடைய சொந்த ஊரான வதம்பசேரியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாக அங்குள்ள மாகாளி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு அங்கு கூடியிருந்த மக்களிடையே அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் பேசிய கந்தசாமி, "என்னுடைய சொந்த ஊர் மக்கள் எனக்கு அளித்து வரும் தொடர் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கண்ணீர் விட்டு அழுகை
மூன்றாவது முறையாகத் எனக்கு சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் தொகுதி மக்களுக்கும் நன்றி. மக்கள் நலனுக்காகத் தான் நான் என்றும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன்" என்றார். ஒருகட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவர் மேடையிலேயே கண்ணீர் மல்கினார்.
குடும்பத்தினரும் அழுகை
கந்தசாமி அழுவதை பார்த்த அவரின் மனைவி ராஜாமணி மற்றும் மகன் பிரபு ராம் ஆகியோரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் அழுததைக் கண்ட ஊர் மக்கள் மற்றும் தொண்டர்களிடையே இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரை மக்கள் ஆறுதல்படுத்தினார்கள். பிறகு கந்தசாமி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வீடியோ வைரல்
கந்தசாமிக்கு முன்னதாக அவரின் சகோதரர் கனகராஜ் சூலூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அதிமுகவுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பகுதி மக்கள் எப்போதும் ஆதரவளித்து வருகிறார்கள். அதனால் தான் கந்தசாமி உணர்ச்சிவசப்பட்டதாக கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications