கஸ்தூரி விவகாரம்.. ஒன்று கூடிய தெலுங்கு அமைப்புகள்.. கோவை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்
கோவை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி வைத்திருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பல்வேறு தெலுங்கு அமைப்பினர் ஒன்றிணைந்து புகார் அளித்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தப் போராட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி பேசியதாவது, அடுத்த தலைமுறையில் யாராவது இறந்தால் கூட கருமாதி செய்வதற்கு கூட அய்யர்கள் இருப்பார்களா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சமுதாயத்தையும் பிளவுபடுத்த வேண்டும். பொய்யான கதைகளை புனைந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

300 வருடங்களுக்கு முன்பு மன்னர்களின் அந்தப்புர மகளிருடன் சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் இன்று தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார். அதனால்தான் திராவிடர் என்ற சொல்லைக் கொண்டு வந்துள்ளனர். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஆதிகுடிகளான பறையர்களுக்குத்தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசுபவர்களுக்கு நிறைய கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அமைச்சரவையில் ஐந்து தெலுங்கு மொழி பேசும் நபர்கள் உள்ளனர். அவர்கள் எதையோ கொடுத்துவிட்டு போகட்டும். நம் உரிமையையும், பிழைப்பையும் அவர்கள் நம்மிடம் இருந்து பிடுங்காமல் நாம் தடுக்க வேண்டும் என்றார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக கஸ்தூரியின் கருத்து தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தெலுங்க சமுதாய மக்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு அமைப்புகள் ஒன்றிணைந்து கஸ்தூரி மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை, தேவாங்க சமூக நல இயக்கம், தமிழ்நாடு கவர பல்ஜா நாயுடு நல சங்கம் ஆகிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனைச் சந்தித்து கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.
ஆணையரை சந்தித்து புகார் அளித்தப் பிறகு அந்த அமைப்பினர் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், விஜயநகர பேரரசு தொடங்கி கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி பேர் தெலுங்கு பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அதை எதையுமே புரிந்துகொள்ளாமல் நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்தூரி தன்னுடைய தரக்குறைவான பேச்சுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications